சுவரண் சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person

சுவரண் சிங் (Sardar Swaran Singh 19, ஆகத்து 1907–30, அக்டோபர் 1994 ) இந்திய அரசியல்வாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவணரசு அமைச்சராகவும் இருந்தவர்.[1]

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் சங்கர் என்னும் சிற்றூரில் பிறந்தார். சவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் நடுவணரசு அமைச்சரவையில் சேர்ந்தார். தொடர்ந்து கேபினட் அமைச்சராக 23 ஆண்டுகள் இருந்தார். இந்திய தொடர்வண்டித் துறை அமைச்சராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ஐக்கிய நாட்டு சபைக்கு அனுப்பப்பட்ட தூதுக் குழுவில் பலமுறை தலைவராக இருந்தார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் துதுக் குழுவில் தலைவராக இருந்தார். 1980 இல் பாக்கித்தான், இந்தோனேசியா, நைசீரியா ஆகிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதுவராகச் சென்றார். சீனா, பாக்கித்தான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1992 இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டது.

சான்றாவணம்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சுவரண்_சிங்&oldid=977" இருந்து மீள்விக்கப்பட்டது