சு. திருநாவுக்கரசர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[2] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[3][4]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delhi confidential: Birthday Plans".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> The Indian EXPRESS (September 17, 2016)
  2. "பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)
  3. "தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்". 14 செப்டம்பர் 2016. 14 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்!".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018)
  5. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிபிசி தமிழ் (மே 23, 2019)
  6. "திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> நக்கீரன் (மே 23, 2019)

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=1755" இருந்து மீள்விக்கப்பட்டது