செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரசு தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதி மறு சீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறு சீரமைப்பினால் செங்கல்பட்டு என்ற பெயரை மாற்றி காஞ்சிபுரம் தொகுதி உருவாக்கப்பட்டது. புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

இங்கு வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • 1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1957 - என்.சிவராஜ் - சுயேச்சை.
  • 1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
  • 1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1967 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1971 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
  • 1980 - அன்பரசு - காங்கிரசு.
  • 1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
  • 1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
  • 1996 - கே.பரசுராமன் - திமுக.
  • 1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1999 - அ.கி. மூர்த்தி - பாமக.
  • 2004 - அ.கி. மூர்த்தி - பாமக.

14வது மக்களவை முடிவு[தொகு | மூலத்தைத் தொகு]

அ.கி. மூர்த்தி (பாமக) - 4,31,643.

கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக) - 2,82,919.

வெற்றி வித்தியாசம் - 1,48,724 வாக்குகள்.