செஞ்சி என். இராமச்சந்திரன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
செஞ்சி என். இராமச்சந்திரன்
இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சர்
தொகுதி வந்தவாசி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
செஞ்சி, தமிழ்நாடு
அரசியல் கட்சி மதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) இரா. தனலட்சுமி
பிள்ளைகள் 1 மகன்
2 மகள்கள்
இருப்பிடம் செஞ்சி, தமிழ்நாடு
As of 22 September, 2006
Source: [1]

செஞ்சி ந. இராமச்சந்திரன் (Gingee N. Ramachandran) (பிறப்பு: சூன் 3, 1944) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

இராமச்சந்திரம் தென்னாற்காடு மாவட்டம் செஞ்சு வட்டம் அவியூரினைச் சார்ந்தவர். இவர் இளங்கலை பட்டத்தினை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டப்படிப்பினை சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இராமச்சந்திரன் தமிழக சட்டப் பேரவைக்கு 1977, 1980, மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து விலகிய போது இவரும் திமுகவிலிருந்து விலகினார். இவர் 14 வது மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின், வந்தவாசி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2][3][4][5] இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK) அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். திசம்பர் மாதம் 6 ஆம் தேதி, மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான வைகோ கட்சியின் செயல் தலைவரான எல். கணேசன் மற்றும் துணை பொதுச் செயலாளர் செஞ்சி என். இராமச்சந்திரன் ஆகியோரை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அனைத்து பதவி மற்றும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். பின்னர் 2014ஆம் ஆண்டு செ. செயலலிதா முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Ramachandran, Shri Gingee N embers Bioprofile". Lok Sabha. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "MDMK rebels to join DMK on Feb 22". New Indian Express. 2 January 2009. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Thanthai Periyar award for Gingee Ramachandran". New Indian Express. 17 January 2020. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Former ministers appointed to key posts in party". New Indian Express. 14 September 2018. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Vaiko follows Rao, pulls out of UPA". தி எகனாமிக் டைம்ஸ். 17 May 2007. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Veteran 'Gingee' Ramachandran Joins AIADMK". New Indian Express. 18 April 2014. 9 April 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]