ஜக்கையா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person

கொங்கரா ஜக்கைய்யா ( Kongara Jaggayya ) (31 திசம்பர் 1926 - 5 மார்ச் 2004) ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், இலக்கிய ஆர்வலரும், பத்திரிகையாளரும், பாடலாசிரியரும், பின்னணிக் கலைஞரும், அரசியல்வாதியுமாவார். மேலும் இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையிலும் தெலுங்கு நாடகங்களிலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். [1] இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த முறை நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் தனது வெண்கலக் குரலுக்காக கஞ்சு காந்தம் ஜக்கையா ( தெலுங்கு ) என்று அழைக்கப்பட்டார். நாற்பது ஆண்டுகள் நீடித்த ஒரு திரைப்பட வாழ்க்கையில், இவர் எண்பது படங்களில், ஒரு முன்னணி நடிகராக, பல்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, தொங்க ராமுடு (1955) போன்ற படைப்புகளில் திருப்புமுனை கதாபாத்திரங்களை இவர் சித்தரித்தார். இவர் விருது பெற்ற படைப்புகளான பங்காரு பாப்பா (1954), அர்த்தங்கி (1955), எது நிஜம் (1956), தோடி கோடலு (1957), டாக்டர் சக்கரவர்த்தி (1964), அந்தஸ்துலு (1965), கான் திரைப்பட விழாவில் இடம்பெற்ற மேகசந்தேசம் (1982), சீதாகொக்க சிலக்கா (1981) போன்ற படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. இவை அனைத்தும் தெலுங்கில் சிறந்தத் திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதை வென்றன. 1962 ஆம் ஆண்டில் உப்புச் சத்தியாகிரகம்உப்பு சத்தியாகிரகத்தை]] அடிப்படையாகக் கொண்ட பதண்டி முந்துகு என்ற அரசியல் நாடகத் திரைப்படத்தை இணைந்து தயாரித்து நடித்தார். இப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும், தாஷ்கண்ட் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மேலும் 5வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறப்புத் திரைப்படமாக குறிப்பிடப்பட்டது . [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜக்கையா கொங்கரா சீதாராமையா மற்றும் இராஜ்யலட்சுமியம்மா ஆகியோருக்கு, குண்டூர் மாவட்டத்தில் தெனாலிக்கு அருகிலுள்ள மொராம்புடி கிராமத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். துக்கிராலாவில் தனது உயர்நிலைப் பள்ளி நாட்களில் வங்காள எழுத்தாளர் திவிஜேந்திரலால் ராய் எழுதிய இந்தி நாடகமான இராமாயணத்தில் இலவன் பாத்திரத்தில் தனது 11 வயதில் நடிக்கத் தொடங்கினார். புகழ்பெற்ற ஓவியரான அடவி பாபிராஜுவின் வழிகாட்டுதலின் கீழ் ஓவியக் கலையிலும் பயிற்சி பெற்றார்.

ஒரு மாணவராக, தெனாலியில் அப்போது இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசு சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அந்த நேரத்தில், இவர் நாக்பூர் மற்றும் பிற இடங்களில் நடந்த கட்சி மாநாடுகளில் கலந்துகொள்வதும், கட்சித் தீர்மானங்களை தெலுங்கில் மொழிபெயர்ப்பதும், அவற்றை பிரதியெடுத்து ஆந்திராவில் விநியோகிப்பதும் வழக்கம்.

இவர் உயர் படிப்புகளுக்காக 1942இல் குண்டூரிலுள்ள ஆந்திர-கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். இவர் குண்டூரில் நவ்யா சாகித்ய அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் இவர் ஒரு பத்திரிகையாளராக தேசாபிமானி ("தேசபக்தர்" என்று பொருள்) என்ற பத்திரிகையில் சேர்ந்தார். [4] பின்னர் இவர் வாராந்திர ஆந்திர குடியரசின் ஆசிரியராக பணியாற்றினார். கல்லூரி நாட்களில், தனது கல்லூரித் தோழனான என். டி. ராமராவுடன் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். கல்லூரியில் ஜக்கையா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். கிருஷ்ணமூர்த்தி நடத்திவந்த கலாச்சார அமைப்பான நவஜோதி கலைஞர்களின் ஒரு பகுதியாகவும் இருந்தார். துக்கிராலாவில் சிலகாலம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு, இவர் அனைத்திந்திய வானொலியில் செய்தி அறிவிப்பாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். [5]

திரைப்பட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜக்கையா திரிபுரனேனி கோபிசந்த்தின் இயக்கத்தில் பிரியுராலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். [6] இருப்பினும், இந்தப் படமோ அல்லது அதன் தொடர்ச்சியாக வெளிவந்த படங்களோ பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவர் முதலில் திரைப்படங்களில் நடிப்பதற்காக வானொலியிலிருந்து ஒரு வருடம் விடுப்பு எடுத்தார். பின்னர் தனது வேலையை விட்டு வெளியேறி திரைத்துறையில் தொடர தீர்மானித்தார். பங்காரு பேபி என்ற படத்தின் வெற்றியுடன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். 1950 முதல் 1970 வரை தெலுங்கு திரையுலகிற்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கினார். இவர் தான் இறக்கும் வரை திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாக, பெரும்பாலான படங்களில் துணை வேடங்களில், நகைச்சுவை வேடங்களில், எதிர் நாயகன் வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழின் மூத்த நடிகர் சிவாஜி கணேசனுக்காக இவர் தெலுங்கு மொழியில் பின்னணி பேசியுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ஜுராசிக் பார்க் படத்தின் தெலுங்கு பதிப்பில், ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் ஜான் ஹம்மண்ட் என்ற கதாபாத்திரமாகவும் , மாபூமி போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற படைப்புகளுக்கான பின்னணிக் கலைஞராகவும் இவர் இருந்தார்.

இவர் சிவகாமி என்ற ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவரது வெண்கலக் குரலுக்காக இவருக்கு "கலாவாசஸ்பதி" என்ற பெயர் வழங்கப்பட்டது. [7]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜக்கையா தனது மாணவ நாட்களிலிருந்தே அரசியலில் தீவிரமாக இருந்தார். காங்கிரசு கட்சியின் சோசலிசக் குழுவுடன் கூட்டணி வைத்திருந்தார். குழு கலைக்கப்பட்டபோது, இவர் ஜெயபிரகாஷ் நாராயணனின் பிரஜா சோசலிச கட்சியில் சேர்ந்தார். ஜவகர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1956இல் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினார். 1967 ஆம் ஆண்டில், ஒங்கோல் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சியின் சார்பில் நான்காவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார்.[8]

இலக்கியச் சாதனைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி போன்ற பல கவிதைகளை தெலுங்கில் இரவீந்திர கீதா என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தாகூரின் "தியாகம்" என்ற நாடகத்தை தெலுங்கில் பலிதானம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் ஆச்சார்யா ஆத்ரேயாவின் நெருங்கிய நண்பரான ஜக்கையா அவர் எழுதிய அனைத்து பாடல்கள், நாடகங்கள், கதைகள் போன்றவற்றை ஏழு தொகுதிகளாக வெளியிட்டு தனது நண்பருக்கு மரியாதை செலுத்தினார்.

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

ஜக்கையா மார்ச் 5, 2004 அன்று தனது 76 வயதில் மாரடைப்பால் இறந்தார். [9]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. krshychait (12 December 2011). ""Kalaa Vachaspati", "Kanchu Kantham": Kongara Jaggayya".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Tollywood's Glorious Journey at Chitramala". 30 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Profile of Gummadi - Telugu film actor".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Archived copy". 26 December 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 April 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. telugucinema.com/c/stars/KJaggayya.shtml
  6. "Rutherford of Telugu cinema".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. earlytollywood.blogspot.in/2008/02/kongara-jaggaiah.html
  8. tollywood.info/actor/k/kongara_jaggayya.htm
  9. https://www.thehindu.com/archive/print/2004/03/06

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:பத்ம பூசண் விருதுகள்

  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜக்கையா&oldid=2744" இருந்து மீள்விக்கப்பட்டது