ஜீவராஜ் மேத்தா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

ஜீவராஜ் மேத்தா குசராத்து மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆவார்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

மகாத்மா காந்தியின் தனி மருத்துவராக இருந்த ஜீவராஜ் மேத்தா, இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.[1]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் பிரதம அமைச்சராக 4 செப்டம்பர் 1948 முதல் பணிபுரிந்தவர்.[2] பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாண அரசில் பொதுப்பணித் துறை, நிதி, தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.

புதிதாக உருவாக்கப்பட்ட குசராத்து மாநிலத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, முதலாவது முதலமைச்சராக ஏப்ரல் 1960 முதல் செப்டம்பர் 1963 முடிய செயல்பட்டவர். பின்னர் 1963 முதல் 1966 முடிய பிரிட்ட்டனுக்கான இந்தியத் தூதுவராக பதவி வகித்தார். மேலும் 4ஆவது மற்றும் 5ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவர்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "A Pioneer in India" (PDF). 2011-06-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-12-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Gaekwar Inaugurates Responsible Government". Indian Express. 5 September 1948. https://news.google.com/newspapers?id=xdI-AAAAIBAJ&sjid=k0wMAAAAIBAJ&pg=3890,6471046&dq=baroda-state&hl=en. 
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜீவராஜ்_மேத்தா&oldid=2747" இருந்து மீள்விக்கப்பட்டது