ஜோதி மிர்தா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோதி மிர்தா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2009 முதல் மே 2014 வரை
முன்னவர் பவார் சிங் தங்வாஸ்
தொகுதி நாகவுர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
புது தில்லி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சிறீ நரேந்தர் கெஹலாவ்ட்
பிள்ளைகள் 1
இருப்பிடம் செய்ப்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரி

ஜோதி மிர்தா (Jyoti Mirdha)(பிறப்பு 26 சூலை 1972) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் பதினைந்தாவது மக்களவைக்கு (2009-2014) இராஜஸ்தானின் நாகௌர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜோதி மிர்தா கெலாட் ராம் பிரகாஷ் மிர்தா மற்றும் வீணா மிர்தாவின் மகளும் மற்றும் ஒரு முக்கிய அரசியல்வாதியான நாதுராம் மிர்தாவின் பேத்தியும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜோதி மிர்தா பதினைந்தாவது மக்களவையில் நாகௌர் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராவார். இவர் 2009்ஆம் ஆண்டில் 1.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக பல விடயங்களில் அவர் ஒரு பொருள் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், பொதுவான மருந்துகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளார். மரபியல் பிரச்சனைகளுக்கான மருந்துகள், விலைக் கட்டுப்பாட்டு வரம்பின் கீழ் இன்னும் பல பொது மருந்துகளைக் கொண்டு வருதல், மருந்து நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான குறைந்த செலவு, உறுப்பு தானம் தொடர்பான சட்டம் மற்றும் மனித சடைப்புத்துத் தீ நுண்மி தடுப்பூசி ஆகியவை தொடர்பான விவாதங்களிலும் பங்கெடுத்துள்ளார்.

மருந்துகளின் சில்லறை விலைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று மிர்தா வலியுறுத்தியுள்ளார். "வெறுமனே, சந்தைப்படுத்தப்படும் 900 அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகள் விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும், ஏனெனில் உற்பத்தியாளர்கள் விலைக் கட்டுப்பாட்டு மருந்துகளிலிருந்து வெளியில் இருக்கும் வகைப்பாட்டிற்கு சுதந்திரமாக இடம்பெயர்வதால் பகுதி கட்டுப்பாடு பயனுள்ளதாக இருக்காது” என்று கூறியுள்ளார். [1][2][3]2010 ஆம் ஆண்டில், மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களால் பரிசுகள் மற்றும் பயணச்சலுகைகளால் இலஞ்சம் பெறுவதற்கான வாய்ப்பைத் தருவதாக மிர்தா கவலை தெரிவித்தார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு கோடைகால பயணத்திற்காக 11 மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் ஆகியோருக்கு மருந்து நிறுவனங்கள் இலஞ்சம் கொடுத்ததாகக் கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஆதாரங்களை அனுப்பினார். தனது கடிதத்தில், மருந்து நிறுவனங்களிலிருந்து மருத்துவர்கள் உதவிகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கம் இருக்கும் அதே வேளையில் நிறுவனங்கள் இந்த பரிசுகளை வழங்குவதைத் தடுக்க வழி வகை செய்யப்படவில்லை என்ற குறைபாட்டையும் தெரிவித்தார்.

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • 2009 ஆம் ஆண்டில் 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுகாதார மற்றும் குடும்ப நலக் குழு உறுப்பினர் - 31 ஆகஸ்ட் 2009 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை
  • பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குழு உறுப்பினர் - 23 செப்டம்பர் 2009 முதல் ஆகஸ்ட் 31, 2012 வரை
  • விவசாயக் குழு உறுப்பினர், 31 ஆகஸ்ட் 2012 முதல் 30 ஏப்ரல் 2014 வரை
  • நிறுவன அமைப்பு, எய்ம்ஸ், புது தில்லி - முன்னாள் உறுப்பினர்

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜோதி_மிர்தா&oldid=2283" இருந்து மீள்விக்கப்பட்டது