தர்கேஸ்வரி சின்ஹா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தர்கேஸ்வரி சின்ஹா
பாரளுமன்ற உறுப்பினர்
தொகுதி பார் (பீகார்)
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 26, 1926(1926-12-26)
துளசிகர், நாலந்தா மாவட்டம் பீகார்
இறப்பு 14 ஆகத்து 2007(2007-08-14) (அகவை 80)
புது டெல்லி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
படித்த கல்வி நிறுவனங்கள் லண்டன் பொருளியல் பள்ளி

தர்கேசுவரி சின்கா (Tarkeshwari Sinha)​​(26 திசம்பர் 1926 - 14 ஆகஸ்ட் 2007) பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார். நாட்டின் முதல் பெண் அரசியல்வாதிகளில், இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கு வகித்தார். தனது 26 வயதில், 1952ஆம் ஆண்டில் பாட்னா கிழக்குத் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் பார் தொகுதியிலிருது மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முதல் பெண் துணை நிதி அமைச்சராக 1958 முதல் 1964 வரை பணியாற்றினார்..[1][2][3] ஐக்கிய நாடுகள் மற்றும் டோக்கியோ சென்ற தூதுக்குழுவை இவர் வழிநடத்தியிருந்தார்.[3] குல்சரின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ஆந்தி, இந்திரா காந்தியைத் தவிர, தர்கேஸ்வரி சின்ஹாவால் ஓரளவு ஈர்க்கப்பட்டார்.[4][5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் பூமிஹார் குடும்பத்தில் நாலந்தா மாவட்டத்தின் கீழ் சண்டிக்கு அருகிலுள்ள துளசிகர் கிராமத்தில் பிறந்தார். சின்கா பட்னாவில் உள்ள மகத் மஹிலா கல்லூரி என்று அழைக்கப்படும் பாங்கிபூர் பெண்கள் கல்லூரியில் கல்வி பயின்றார். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பீகார் மாணவர் காங்கிரசின் தலைவராக இருந்தார். லண்டன் பொருளியல் பள்ளியில் முதுகலை பொருளாதாரம் படித்தாா்.[2] இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.[6]

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் பீகாரில் உள்ள பார் தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1952ஆம் ஆண்டில் பாட்னா கிழக்குத் தொகுதியிலிருந்து முதல் பொதுச் சட்டத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரசு கட்சியின் சார்பில் மீண்டும் இவர் 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

சின்ஹா ​​1957 நவம்பர் 19 அன்று உண்மையினைச் சொல் (To Tell the Truth) என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழுவில் இருந்த நான்கு உறுப்பினர்களில் இருவரை முட்டாளாக்கினார்.[7]

சமூக பணி[தொகு | மூலத்தைத் தொகு]

புது தில்லியில் விமான விபத்தில் இறந்த ஏர் இந்தியாவுடன் விமானியும், இவரது சகோதரருமான கேப்டன் கிரிஷ் நந்தன் சிங் நினைவாக, தர்கேஷ்வரி சின்ஹா, துளசிகரில் ஒரு மருத்துவமனையை அமைத்திருந்தார். சிகிச்சையினை இலவசமாக வழங்கும் இந்த இரண்டு மாடி மருத்துவமனையை நிர்மாணிப்பதற்காக அந்த நாட்களில் இவர் கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் நிதி திரட்டினார். நாளந்தாவில் சாண்டி மற்றும் ஹர்னாட் ஆகியோருடன் கிராமத்தை இணைக்க ஒரு சாலையை அமைப்பதற்கான முயற்சியையும் இவர் மேற்கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. R. Vatsyayan (2008-04-04). "Beauty and Brains". The Hindustan Times. Archived from the original on 2008-09-30. https://web.archive.org/web/20080930164954/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=53769302-2ce3-495f-93e6-8eea0cbe6749&MatchID1=4679&TeamID1=6&TeamID2=3&MatchType1=1&SeriesID1=1179&MatchID2=4674&TeamID3=4&TeamID4=8&MatchType2=1&SeriesID2=1177&PrimaryID=4679&Headline=Beauty+%26amp%3B+brains. பார்த்த நாள்: 2008-04-04. 
  2. 2.0 2.1 2.2 A.J.Philip (2008-04-04). "A Beautiful Politician". The Tribune. http://www.tribuneindia.com/2007/20070822/edit.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  3. 3.0 3.1 Qureshi, Muniruddin (2004). Social Status of Indian Women: emancipation. Anmol Publications Pvt. Ltd.. பக். 920. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-261-1360-6. 
  4. V. Gangadhar (2008-04-04). "Where is reality?". தி இந்து. Archived from the original on 2010-09-02. https://web.archive.org/web/20100902131655/http://www.hinduonnet.com/2001/07/20/stories/09200221.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  5. Sanjay Suri. "Mrs. G's String of Beaus".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. 6.0 6.1 "Tarkeshwari Sinha". veethi.com. 2017-08-19 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. YouTube
"https://ta.bharatpedia.org/index.php?title=தர்கேஸ்வரி_சின்ஹா&oldid=2595" இருந்து மீள்விக்கப்பட்டது