தினேஷ் நந்தன் சகே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தினேஷ் நந்தன் சகே
10வது திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
2 சூன் 2003 – 14 அக்டோபர் 2009
திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார்
முன்னவர் கிருஷ்ண மோகன் சேத்
பின்வந்தவர் கம்லா பெனிவால்
1வது [[சட்டீஸ்கர் ஆளுநர்]]
பதவியில்
1 நவம்பர் 2000 – 1 சூன் 2003
சத்தீஸ்கர் முதலமைச்சர் அஜித் ஜோகி
முன்னவர் புதிதாக உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் கிருஷ்ண மோகன் சேத்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 பிப்ரவரி 1936
மேதாபூர், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது பீகார், இந்தியா)
இறப்பு 28 சனவரி 2018(2018-01-28) (அகவை 81)
பாட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சி சமதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மஞ்சு சஞ்சய்
பிள்ளைகள் 3

தினேஷ் நந்தன் சகே (Dinesh Nandan Sahay)(2 பிப்ரவரி 1936 – 28 ஜனவரி 2018) [1] என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பீகார் காவல்துறைத் தலைவராகவும், பின்னர் திரிபுரா, சத்தீசுகர் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார் .

இளமை[தொகு | மூலத்தைத் தொகு]

சகே பீகாரின் மாதேபூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கிஷோரி தேவி மற்றும் தேவ நந்தன் சகே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பாட்னாவில் வளர்ந்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பினை முடித்தார். இவர் மஞ்சு சகேயை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

காவல் பணி[தொகு | மூலத்தைத் தொகு]

1960-ல் இந்தியக் காவல் பணியில் சேருவதற்கு முன்பு எச். டி. அர்ரா கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது பணியினை தொடங்கினார். இதன்பின், பீகார் மாநிலத்தின் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

காவல் பணி ஓய்வுக்குப் பிறகு சமதா கட்சியில் சேர்ந்தார். 2000 முதல் 2003 வரை சத்தீசுகர் மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார். சூன் 2003-ல் திரிபுரா ஆளுநரானார். 2009 வரை இந்தப் பதவியில் தொடர்ந்தார். இருப்பினும் பாரம்பரியமாக ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் சகே விதிவிலக்காகக் கூடுதல் காலம் பதவியிலிருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Chhattisgarh Guv, CM condole demise of Dinesh Nandan Sahay
  2. "Konwar sworn in as Tripura governor -" The Telegraph (india) 26 March 2013
"https://ta.bharatpedia.org/index.php?title=தினேஷ்_நந்தன்_சகே&oldid=1243" இருந்து மீள்விக்கப்பட்டது