திவ்யா எஸ். ஐயர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
திவ்யா எஸ். ஐயர்
திவ்யா சேச ஐயர்
Dr. Divya S. Iyer IAS - incumbent Pathanamthitta district magistrate.jpg
பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஜூலை 2021
நியமித்தவர் கேரள முதலமைச்சர்
கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயன்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட இயக்குநர்
பதவியில்
2018 – 7 ஜூலை 2021
நியமித்தவர் கேரள முதலமைச்சர்
கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயன்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age[1]
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) வார்ப்புரு:Marriage
பிள்ளைகள் 1
கல்வி மருத்துவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள் கிருத்தவ மருத்துவக் கல்லூரி
தொழில் Script error: No such module "list".
வார்ப்புரு:Listen

திவ்யா சேச ஐயர் (Divya Sesha Iyer)(பிறப்பு 16 அக்டோபர் 1984) ஓர் இந்திய ஆட்சிப்பணியாளரும், மருத்துவரும், பத்திரிக்கை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். இவர் கேரளாவில் இந்திய ஆட்சிப் பணியின் ஒரு பகுதியாக உள்ளார். இவர் தற்போது பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக உள்ளார். [2] மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட இயக்குநரும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு | மூலத்தைத் தொகு]

திவ்யா ஐயர் 16 அக்டோபர் 1984இல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சேச ஐயர் என்பவருக்கும்,[3] பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் பகவதி அம்மாளுக்கும் பிறந்தார்.[4]

திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், வேலூர், கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[5]

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், தனது ஆட்சிப்பணி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவராக இருந்தார். மேலும், தொடர்ந்து மருத்துவப் பயிற்சியிலும் ஈட்பட்டிருந்தார்.[6] [7] இவர் 2014இல் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார்.[8] கோட்டயத்தில் உதவி ஆட்சித் தலைவராக பணிபுரிந்த பின்னர் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை ஆட்சியரானார்.

2016ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கீழ் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பின் தொடர்பு அதிகாரியாகவும், கோட்டயத்தில் உதவி ஆட்சியராகவும் இருந்த, ஐயர் வாக்காளர் வாக்களிப்பை மேம்படுத்த உதவும் "எனது எதிர்காலம்" என்ற குறிக்கோளுடன் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை உருவாக்கினார்.[9] 2016ஆம் ஆண்டில், வாக்களிக்கும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காகவும், வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் 'வைரல் தும்பில் நம்முதே பாவி' என்ற பாடலை எழுதி பாடினார். இது மாவட்ட ஆட்சியரின் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.[10] [11]

துணை ஆட்சியராக இருந்த இவர் 2018இல், உள்ளூர் சுய-அரசுத் துறையின் துணைச் செயலாளராக மாற்றப்பட்டார்.[12] [13] [14]

கோவிட்-19 பெருந்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திவ்யா எஸ். ஐயர்.

இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட இயக்குனராக பணியாற்றினார்.[15] [16] இந்தப் பணியில், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது #BreakTheChain விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இவரது முக்கிய பங்கு காரணமாக, 2020 ஆம் ஆண்டின் கேரளா இன்சைடர் 50 மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17] [18]

12 ஜூலை 2021 இல், திவ்யா பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக சேர்ந்தார். [19]

சொந்த வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தனது கணவர் கா. சு. சபரிநாதனுடன் திவ்யா எஸ். ஐயர்

30 ஜூன் 2017 அன்று, திவ்யா [[அருவிக்கரை சட்டமன்றத் தொகுதி|அருவிக்கரை[[சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் , குமாரகோவில் கா. சு. சபரிநாதன், என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் இதன் மூலம் கேரளாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் -இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இணை என ஆனார்.[20] [21] [22] 9 மார்ச் 2019 அன்று, இவர்களுக்கு மல்ஹர் என்ற மகன் பிறந்தார்.[23] [24]

முன்னாள் அமைச்சரும், கேரள சட்டப் பேரவைத் தலைவருமான ஜி.கார்த்திகேயன் இவரது மாமனார் ஆவார்.[25]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Civil List". 15 March 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Divya S Iyer IAS to Adeela Abdulla IAS, here are Kerala's 8 women District Collectors". https://www.thenewsminute.com/article/divya-s-iyer-ias-adeela-abdulla-ias-here-are-keralas-8-women-district-collectors-152088. பார்த்த நாள்: 10 July 2021. 
  3. Philip, Shaju (May 4, 2017). "An officer and the gentleman: Kerala IAS officer to marry MLA". The Indian Express. https://indianexpress.com/article/india/an-officer-and-the-gentleman-kerala-ias-officer-to-marry-mla-4639707/. 
  4. "MLA KS Sabarinathan to marry Thiruvananthapuram sub-collector Divya S Iyer". Deccan Chronicle. May 3, 2017. https://www.deccanchronicle.com/nation/in-other-news/030517/mla-ks-sabarinathan-to-marry-thiruvananthapuram-sub-collector-divya-s-iyer.html. 
  5. Aswin V.N. (25 March 2017). "Imperfections need to be appreciated" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/education/imperfections-need-to-be-appreciated/article17663614.ece. 
  6. Staff Reporter (6 March 2017). "This bureaucrat also heals" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/this-bureaucrat-also-heals/article17413890.ece. 
  7. Aswin V.N. (25 March 2017). "Imperfections need to be appreciated" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/education/imperfections-need-to-be-appreciated/article17663614.ece. Aswin V.N. (25 March 2017). "Imperfections need to be appreciated". The Hindu.
  8. "Kerala MLA KS Sabarinadhan to marry Thiruvananthapuram sub-collector Divya Iyer". The New Indian Express. May 2, 2017. https://www.newindianexpress.com/states/kerala/2017/may/02/kerala-mla-ks-sabarinadhan-to-marry-thiruvananthapuram-sub-collector-divya-iyer-1600194.html. 
  9. "Straight bat: Vote bank message to lure voters". Deccan Chronicle. April 5, 2016. https://www.deccanchronicle.com/amp/nation/politics/050416/straight-bat-vote-bank-message-to-lure-voters.html. 
  10. "പാട്ടു പാടി 'വോട്ടു' ചെയ്യിക്കാന്‍ കോട്ടയത്തൊരു കളക്ടര്‍...ദിവ്യ എസ് അയ്യര്‍". 13 April 2016.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "Songbird bureaucrat: Kottayam Asst. Collector's beautiful melody encouraging voting". The News Minute. April 12, 2016. https://www.thenewsminute.com/article/songbird-bureaucrat-kottayam-asst-collectors-beautiful-melody-encouraging-voting-41507. 
  12. "Divya S. Iyer transferred to Local Self-Govt dept". The Hindu. April 5, 2018. https://www.thehindu.com/news/national/kerala/divya-s-iyer-transferred-to-local-self-govt-dept/article23436218.ece. 
  13. "Sub-Collector Divya S Iyer transferred to Local Self Government Department Department". The New Indian Express. April 5, 2018. https://www.newindianexpress.com/states/kerala/2018/apr/05/sub-collector-divya-s-iyer-transferred-to-local-self-government-department-department-1797182.html. 
  14. Correspondent (April 6, 2018). "Divya S Iyer went by the book in Kuttichal land deal, says collector Vasuki". OnManorama. https://www.onmanorama.com/news/kerala/2018/04/06/divya-s-iyer-kuttichal-land-deal.html. 
  15. Shiba Kurian (22 February 2019). "How NREGA helped in rebuilding Kerala, as well as provided livelihood to people" (in en-IN). The News Minute. https://www.thenewsminute.com/article/how-nrega-helped-rebuilding-kerala-well-provided-livelihood-people-97178. 
  16. "Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme". 7 May 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  17. Lazar. "Kerala Insider's 50 Most Influential People of 2020". Kerala Insider. https://www.keralainsider.com/50-most-influential-people-of-2020-in-kerala/. 
  18. SMITHA TK (30 April 2020). "Food Kits, #BreakTheChain: How Kerala Made Life Easy During Corona" (in en-IN). The News Minute. https://www.thequint.com/voices/opinion/startup-india-uber-ola-zomato-layoffs-unicorns-venture-capitalists-risk-appetite-covid-impact/coronavirus/coronavirus/kerala-mnrega-coronavirus-pandemic-food-kits-cash-work-break-the-chain. 
  19. Ajmal MK (12 July 2021). "ദിവ്യ എസ് അയ്യര്‍ പത്തനംതിട്ട ജില്ലാ കളക്ടറായി ചുമതലയേറ്റു" (in ml). OneIndia Malayalam. https://malayalam.oneindia.com/news/pathanamthitta/divya-s-iyer-takes-over-as-pathanamthitta-district-collector-299976.html. 
  20. Jisha Surya (3 May 2017). "Kerala MLA KS Sabarinathan marries IAS officer" (in en-IN). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://m.timesofindia.com/city/thiruvananthapuram/congress-mla-ks-sabarinadhan-marries-kerala-ias-officer/articleshow/59381651.cms. 
  21. "Kerala: Bureaucrat Marries Politician, Media Can't Stop Obsessing". The Quint. May 17, 2017. https://www.thequint.com/news/india/kerala-bureaucrat-marries-politician#read-more. 
  22. Sreenivasan (May 9, 2017). "Divya-Sabari alliance: history made in heaven". OnManorama. https://www.onmanorama.com/news/columns/global-indian/2017/05/09/divya-iyer-sabarinadhan-marriage-bureaucracy-politics-tp-sreenivasan.html. 
  23. "Sabarinadhan-Divya S Iyer blessed with baby boy" (in en-IN). 9 March 2019. https://www.onmanorama.com/kerala/top-news/2019/03/09/sabarinadhan-divya-iyer-baby-photo.html. 
  24. "Sabari-Divya's baby boy named after a raga". https://www.onmanorama.com/kerala/top-news/2019/04/25/sabarinadhan-divya-s-iyer-baby-boy-name.html. 
  25. "An officer and the gentleman: Kerala IAS officer to marry MLA". The Indian Express. 4 May 2017. https://indianexpress.com/article/india/an-officer-and-the-gentleman-kerala-ias-officer-to-marry-mla-4639707/. 

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு
"https://ta.bharatpedia.org/index.php?title=திவ்யா_எஸ்._ஐயர்&oldid=1176" இருந்து மீள்விக்கப்பட்டது