தென்திருவாலவாய் கோயில்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்திருவாலவாய் கோயில், தெற்குமாசி வீதி, மதுரை

தென்திருவாலவாய் கோயில் அல்லது தென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. [1] மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் வரும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

கோயில் சிறப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.
  • திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.
  • தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதாக தொன் நம்பிக்கை.
  • இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால் மரணத்துன்பம் நீங்குகிறது.
  • இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர். மதுரையில் உள்ள பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையிலும் நன்மை தருவாருரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் பலன்களும் ஒருசேர கிடைக்கும்.

தல வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

சைவ சமயத்தை சார்ந்த பாண்டிய அரசன் கூன் பாண்டியன் சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அரசி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். சமணர்கள் பலவிதமான மருத்துவம் செய்தும் கூன்பாண்டியனின் வெப்புநோயை குணப்படுத்த இயலவில்லை. மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடிய சிவபெருமானுக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை கூன்பாண்டியன் மீது பூசி விட்டால் வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. இதனால் கூன்பாண்டியன் சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்