தேவகி கோபிதாசு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician தேவகி கோபிதாசு (Devaki Gopidas) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] தேவகி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1962 - 1968 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவில் கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3][4][5]

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

தன்னுடைய பள்ளிப் படிப்பை கோட்டயத்திலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியிலும் முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது காங்கிரசு கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். பின்னர் கொல்கத்தாவில் சட்டம் பயின்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

1918 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கோட்டயம் மாவட்டம் காரப்புழாவில் ஓர் ஈழவர் குடும்பத்தில் அரங்கசேரி நாராயணன் மற்றும் டி.கே.நாராயணி ஆகியோருக்கு மகளாக தேவகி கோபிதாசு பிறந்தார்.[6]ஆலப்புழா மாவட்டம் வேழப்பிரா கிராமத்தைச் சேர்ந்த கோபிதாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் குடியேறினார்.

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

1973 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று 65 பேருடன் பறந்த இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த 48 பேரில் இவரும் ஒருவராவார்.[7]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Is CPI paying mere lip service to gender equality?". www.onmanorama.com. 2021-07-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. 22 November 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 145. 22 November 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. பக். 470–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-513-5. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA470. பார்த்த நாள்: 23 November 2017. 
  5. India. Parliament. Rajya Sabha. Parliamentary Debate. பக். 3879. https://books.google.com/books?id=VSYfAQAAIAAJ. பார்த்த நாள்: 23 November 2017. 
  6. Sadasivan, S. N. (2000) (in en). A Social History of India. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-170-0. https://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA666&lpg=PA666&dq=devaki+gopidas+c+kesavan&source=bl&ots=9m3uNfjjxp&sig=ACfU3U0MXOJDTuX6SjupiPMNRNV8biZ-UQ&hl=en&sa=X&ved=2ahUKEwiaqLuT3PnxAhWn8XMBHZ7gB3IQ6AEwBHoECBcQAg#v=onepage&q=devaki%20gopidas%20c%20kesavan&f=false. 
  7. Reporter, Our Staff (2004-06-01). "Win back people's trust: Chandy tells politicians" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/win-back-peoples-trust-chandy-tells-politicians/article27620075.ece. 
"https://ta.bharatpedia.org/index.php?title=தேவகி_கோபிதாசு&oldid=1602" இருந்து மீள்விக்கப்பட்டது