நிதி அமைச்சகம் (இந்தியா)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Government agency

நிதி அமைச்சகம் (Ministry of Finance) என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களுள் ஒன்று. இதன் தலைவர் நிதியமைச்சர் எனப்படுவார். இந்த அமைச்சகத்தின் பணியானது, வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகும்.

நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கிழேயே குடியியல் பணிகளின் உட்பிரிவுகளான ( இந்திய வருவாய் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service , இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் சேவை (Indian Civil Accounts Service) உட்பட) வருகின்றது.

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

[1] விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஆவார். இவர் 1947 நவம்பர் 26 அன்று விடுதலை இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.

நிர்வாக அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

நிதி அமைச்சகம் ஐந்து பிரிவுகளை கொண்டது.

  • பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
  • செலவு துறை (Department of Expenditure)
  • வருவாய் துறை (Department of Revenue)
  • நிதி சேவைகள் துறை (Department of Financial Services)
  • பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)

மேலும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தியாவின் நிதியமைச்சர்கள்

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "முதலாம் நிதி அமைச்சர்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:India-gov-stub