நீதியரசர் ஹங்கர்ஃபோர்ட் டுடர் போதம் சிலை, மே தின பூங்கா, சென்னை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Delete நீதியரசர் ஹங்கர்ஃபோர்ட் டுடர் போதம் சிலை (statue of Hungerford Tudor Boddam) தமிழ்நாட்டின், சென்னை மாநகரம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவின் வடகிழக்கு மூலையில், வளைவுடனான விதானத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. [1] இவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 1896 முதல் 1908 வரை பியூஸ்னே நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். பியூஸ்னே (Puisne)(பிரெஞ்சு சொல்) நீதிபதி ஒரு சாதாரண நீதிபதி அல்லது குறைவான தகுதியுடைய நீதிபதியாவார். சென்னை நகரில் சிலை வடிக்கப்பட்ட ஒரு சில பிரிட்டிஷ் நீதிபதிகளுள் இவரும் ஒருவர் ஆவார். [1]

போதம் ஆற்றிய நற்செயல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

மெட்ராஸின் விலங்குகள் வதை தடுப்பு சங்க (Society for the Prevention of Cruelty to Animals (SPCA) செயல்பாடுகளில் அவர் கணிசமான ஆர்வம் காட்டினார். இந்த சங்கத்திற்கான அழகிய கட்டிடம் வேப்பேரி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு 1900 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ராஜா சர் ராமஸ்வாமி முதலியார், லாடு கோவிந்தாஸ் மற்றும் ஜி. நாராயணசாமி செட்டி போன்ற முன்னணி உள்ளூர் குடிமக்களை சங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபட அன்புடன் வற்புறுத்தினார். போதமின் முயற்சியால்.1903 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர முடிந்தது. விலங்குகளுக்கான மருத்துவமனை, வேப்பேரியில் ராஜா வேணுகோபால முதலியார் அளித்த நன்கொடை மூலம் துவங்கியதற்கும் போதமே காரணம். வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளைப் பராமரிப்பதற்கான அடைப்புகளை நிறுவுவதற்கும் உள்ளூர் குடிமக்களை வற்புறுத்தியவர் போதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்தப் பியூஸ்னே நீதிபதி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். இவரது சிலை நிறுவுவதற்கான கணிசமான பொருளுதவி பொதுமக்களிடமிருந்து, குறிப்பாக குஜராத்தி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டதற்கும் இவர் ஆற்றிய நற்செயல்களே காரணம்.[1]

மவுண்ட் ரோட்டில் நிறுவப்பட்ட சிலை[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தச் சிலை இதற்கு முன்னர் மவுண்ட் ரோட்டில் ஜிம்கானா கிளப்புக்கு எதிரே, பல்லவன் சாலைக்கு அருகில் நிறுவப்பட்டிருந்தது. பின்னர் நேப்பியர் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் இடமாற்றம் கண்ட சிலைகளில் இதுவும் ஒன்று.[1]

மே தின பூங்காவிற்கு மாற்றப்பட்ட சிலை[தொகு | மூலத்தைத் தொகு]

நேப்பியர் பூங்காவில் இந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் சர் ஆர்தர் லாலி, 6வது பரோன் வென்லாக், GCSI, GCIE, KCMG (மெட்ராஸின் ஆளுநர் : 1906-1911) ஆவார். சிலையின் கீழ் அமைக்கப்பட்ட கல் பலகையில் பொறிக்கப்பட்டுள்ள வாசககங்கள்:: "இந்தச் சிலை 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி மெட்ராஸின் ஆளுநர் மாண்புமிகு சர் ஆர்தர் லாலி ஜி.சி.எஸ்.ஐ. ஜி.சி.ஐ.இ. கே.சி.எம்.ஜி. யால் திறந்து வைக்கப்பட்டது." இச்சிலை பொதுமக்களின் பொதுச்சந்தாப் பணத்தைக் கொண்டு செதுக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.[1]

மே தின பூங்கா[தொகு | மூலத்தைத் தொகு]

சிந்தாதிரிப்பேட்டை துணை மேயர் கபாலமூர்த்தி சாலையில் மே தின பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா 1869 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. இந்த பூங்கா உருவாக்கப்பட்ட போது மெட்ராஸ் கவர்னராக இருந்த 10வது பிரபு பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier) நினைவாக நேப்பியர் பூங்கா என்று பெயரிடப்பட்டது.[2] கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு. கருணாநிதியால் நேப்பியர் பூங்காவின் பெயர் மே தினப் பூங்கா என்று மாற்றப்பட்டது. இரண்டு பற்சக்கரங்கள், துப்பாக்கி மற்றும் தமிழில் 'மே' என்ற சொல் செதுக்கப்பட்ட 'மே தின' நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா சிம்சன் & கோ நிறுவனத்தால் தத்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Madras miscellany: A touch of the Irish Muthiah S. The Hindu February 8, 2015
  2. Tourist Guide to Chennai Subburaj V. Sura Books. 2008. பக். 10.ISBN=978-81-7478-040-9
  3. Parks of Chennai பரணிடப்பட்டது 2015-04-03 at the வந்தவழி இயந்திரம் Amirthalingam, M. Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC