பகவந்த் மான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பகவந்த் மான்
படிமம்:Bhagwant Mann Lok Sabha.jpg
பகவந்த் சிங் மான்
17வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மார்ச் 2022
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முன்னவர் சரண்ஜித் சிங் சன்னி
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்]]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மார்ச் 2022
முன்னவர் தல்வீர் சிங் கங்குரா
தொகுதி தூரி சட்டமன்றத் தொகுதி [
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 14 மார்ச் 2022
முன்னவர் விஜய் இந்தர் சிங்லா
தொகுதி சங்கரூர்
ஒருங்கிணைப்பாளர், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 சனவரி 2019[1]
முன்னவர் பல்பீர் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு பகவந்த் சிங் மான்
வார்ப்புரு:Birth date and age
சங்கரூர், பஞ்சாப், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி
பிற அரசியல்
சார்புகள்
பஞ்சாப் மக்கள் கட்சி (2012-2014)
தொழில் நடிகர், பாடகர், நகைச்சுவையாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி
கையொப்பம்
வார்ப்புரு:Infobox musical artist

பகவந்த் மான் (Bhagwant Singh Mann ) (பிறப்பு: 17 அக்டோபர் 1973) இந்தியாவின் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதி, சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பாடகர், நடிகர் மற்றும் முன்னாள் நடிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]இவர் 10 மே 2017 அன்று சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டில் பகவந்த் மான் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார்.[3][4]2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லெகரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மார்ச் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[5]2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். [6] இவர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது போதை மது சர்ச்ச்சையில் சிக்கினார்.[7] [8]

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.

பஞ்சாப் முதலமைச்சர் பதவி[தொகு | மூலத்தைத் தொகு]

சனவரி 18, 2022 அன்று, பகவந்த் மன், 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சருக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் 93% வாக்காளர்கள் பகவந்த் மான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறினர். இவரது தலைமையின் கீழ் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் 117 இடங்களில் 92 இடங்களை வென்றது.[9] பஞ்சாபின் முதல் அமைச்சராகப் பகவந் மன் பதவியேற்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.[10][11]

இவர் 16 மார்ச் 2022 அன்று, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சராக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[12][13]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. A year after exit Bhagwant Mann reappointed Punjab Aam Aadmi Party Chief
  2. Punjab election: AAP announces Bhagwant Mann as its chief ministerial candidate
  3. [1] பரணிடப்பட்டது 13 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. "I want to see Punjab growing- Bhagwant Mann". Americanpunjabinews.com. 2011-03-21. 3 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-19 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Sangrur MP Bhagwant Mann of AAP". India Today (in English). June 2, 2014. 2019-05-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Bhagwant Mann to contest from Jalalabad". Tribuneindia News Service (in English). 2021-06-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Mann 'drunk' complaint to Parliament: 'Kejriwal was told many times but least bothered'". The Indian Express (in English). 2016-07-23. 2021-06-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Bhagwant Mann says won't drink from now, Arvind Kejriwal terms it 'sacrifice' for people". Hindustan Times (in English). 2019-01-20. 2021-06-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "AAP Picks Bhagwant Mann For Punjab, Says He Scored 93% In Televote". NDTV News Website (in English). 21 January 2022 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. ""This Big A Majority Scares Me Too," Says Arvind Kejriwal". NDTV.com. 2022-03-10 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "'Will take oath in Bhagat Singh's ancestral village, not Raj Bhawan':, Bhagwant". Hindustan Times (in English). 2022-03-10. 2022-03-10 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. Bhagwant Mann assumes office as Punjab Chief Minister
  13. 'Won't waste single day': Bhagwant Mann takes oath as Punjab CM at Bhagat Singh's village

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பகவந்த்_மான்&oldid=2558" இருந்து மீள்விக்கப்பட்டது