பசீர் அகமது கான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பசீர் அகமது கான் (Baseer Ahmad Khan ) 2000 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். தற்போது இவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசகராக பணிபுரிகிறார்.

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

2009 ஆம் ஆண்டில் கான் பாரமுல்லாவின் துணை ஆணையராக இருந்தபோது குல்மார்க் நில முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.[1] டிசம்பர் 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் மார்ச் 2013 வரை சிறீநகர் மாவட்டத்தின் துணை ஆணையர் பதவியில் இருந்தார்.[2] காசுமீரின் கோட்ட ஆணையாளராக இருந்த இவர் 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 அன்று மேலதிக வயதை எட்டியபோதும் அரசாங்கம் இவரது சேவையை மேலும் ஒரு வருடம் நீட்டித்தது. ஆனால் இவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், சம்மு-காசுமீரின் துணைநிலை ஆளுநர் முர்முவின் நான்காவது ஆலோசகராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.[3][4][5] ஓர் ஆலோசகராக இவர் சக்தி மேம்பாடு, கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராச், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மலர் வளர்ப்பு போன்ற இலாகாக்களை நிர்வகிக்கிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Ahmad, Mudasir (16 March 2020). "J&K: Baseer Khan, Accused in Gulmarg Land Scam, Appointed as Advisor to Lt Governor". The Wire. 2020-08-14 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former Deputy Commissioners | District Srinagar, Government of Jammu and Kashmir | India" (in English). 2020-08-14 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Sharma, Arun (2020-03-16). "Gulmarg scam accused Baseer Ahmad Khan to be J&K L-G's adviser". The Indian Express (in English). 2020-08-14 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. IANS (15 March 2020). "Baseer Ahmad Khan made advisor to J&K L-G". Outlook India. 2020-08-14 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Baseer Ahmad Khan, IAS, appointed as J&K adviser" (in en-IN). The Hindu. 2020-03-15. https://www.thehindu.com/news/national/other-states/baseer-ahmad-khan-ias-appointed-as-jk-adviser/article31075592.ece. 
  6. "KAS Officer Bio Data". jkgad.nic.in. 2020-08-14 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பசீர்_அகமது_கான்&oldid=1184" இருந்து மீள்விக்கப்பட்டது