பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox organization

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மான்யக் குழு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது. 1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956 இயற்றி முறைப்படுத்தியது.

பல்கலைக்கழகங்களின் வகைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

பல்கலைக்கழக மானியக் குழுவினால் கட்டுப்படுத்தப்படும் பல்கலைக்கழகங்களின் வகைகள் பின்வருமாறு:

மத்திய பல்கலைக்கழகங்கள், அல்லது யூனியன் பல்கலைக்கழகங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பாராளுமன்றத்தின் ஒரு செயலால் நிறுவப்பட்டுள்ளன, இவை கல்வி அமைச்சின் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ளன.[1] As of 12 திசம்பர் 2018 12 டிசம்பர் 2018 நிலவரப்படி, யுஜிசி வெளியிட்டுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 49 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.[2]

மாநில பல்கலைக்கழகங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் அரசுகளினால் நடத்தப்படுகின்றன. இவை பொதுவாக அந்தந்த அரசின் சட்டமன்ற சட்டத்தால் நிறுவப்படுகின்றன. 6 அக்டோபர் 2017 நிலவரப்படி, யுஜிசி 370 மாநில பல்கலைக்கழகங்களை பட்டியலிடுகிறது.[3] யுஜிசியால் பட்டியலிடப்பட்ட மிகப் பழமையான பல்கலைக்கழகம் நிறுவனப்பட்ட நாள் 1857ஆம் ஆண்டாகும். பழமையான பல்கலைக்கழகங்களாக, மும்பை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் உள்ளன. பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்கள், பல இணைவுற்றப் கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களாக உள்ளன. பல பல்கலைக்கழகங்கள் மிகச் சிறிய நகரங்களிலும் அமைந்துள்ளன. இவை பொதுவாக இளங்கலை படிப்புகளை வழங்குகின்றன. ஆனால் முதுகலை படிப்புகளையும் வழங்கக்கூடும். மேலும் நிறுவப்பட்ட கல்லூரிகள் முனைவர் பட்ட ஆய்வினை இணைவுப்பெற்ற பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் சில துறைகளில் வழங்குகின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கருதப்படும் பல்கலைக்கழகம், அல்லது "பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது" என்பது யுஜிசியின் ஆலோசனையின் பேரில் உயர் கல்வித் துறையால் யுஜிசி சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் வழங்கப்பட்ட சுயாட்சியின் நிலை.[4] 6 அக்டோபர் 2017 நிலவரப்படி, யுஜிசி 123 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளதாகப் பட்டியலிடுகிறது. [5] இந்த பட்டியலின் படி, பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்ட முதல் நிறுவனம் பெங்களூரில் உள்ள, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகும். இதற்கு 12 மே 1958 அன்று இந்த தகுதியினை வழங்கியது.

தனியார் பல்கலைக்கழகங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகையப் பல்கலைக்கழகங்கல் பட்டங்களை வழங்க முடியும். ஆனால் அவர்கள் வளாகத்திற்கு வெளியே இணைந்த கல்லூரிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. 6 அக்டோபர் 2017 நிலவரப்படி, தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 282 ஆகும்.[6]

இந்தியாவில் இயங்கும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) வெளியிட்டுள்ளது. யுஜிசி சட்டத்திற்கு முரணாக செயல்படும் இந்த 24 சுய-நிதி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை எந்த பட்டங்களையும் வழங்க உரிமை இல்லை என்று யுஜிசி கூறியுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Central Universities". mhrd.gov.in. Ministry of Education. 3 March 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 March 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Consolidated list of Central Universities as on 12.12.2018" (PDF). UGC. 12 December 2018. 13 January 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "List of State Universities as on 06.10.2017" (PDF). University Grants Commission. 6 October 2017. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Indian Institute of Space Science and Technology (IISST) Thiruvanathapuram Declared as Deemed to be University". Union Human Resource Development Ministry, Press Information Bureau. 14 July 2008. 3 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "List of Institutions of higher education which have been declared as Deemed to be Universities as on 06.10.2017" (PDF). University Grants Commission. 6 October 2017. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "State-wise List of Private Universities as on 6.10.2017" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 6 October 2017. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. வார்ப்புரு:Cite press release

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய ஆணையங்கள்