பிரணப் முகர்ஜி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வார்ப்புரு:Lang-bn, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.[1] முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்[3].

2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

இவரது நூல்கள்:

  1. பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனமி-1984.
  2. ஆஃப் தி டிராக் - 1987.
  3. சாகா ஆப் ஸ்ட்ரக்குள் அண்ட் சேக்ரிபைஸ் - 1992.
  4. சேலஞ்சஸ் பிஃபோர் தி நேசன் - 1992.
  5. தாட் அண்ட் ரிப்லெக்சன்ஸ் - 2014.
  6. தி டிராமடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ் - 2014.

தனிவாழ்வு[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் [5][6]. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்[7]. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்[8]

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. https://www.vikatan.com/amp/news/india/5234.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://news.vikatan.com/?nid=9451[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "It's President Pranab". இந்தியன் எக்சுபிரசு. சூலை 23,2012. சூலை 23, 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-09-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4195
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-08-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end வார்ப்புரு:இந்தியக் குடியரசுத் தலைவர்கள் வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள் வார்ப்புரு:பாரத ரத்னா

"https://ta.bharatpedia.org/index.php?title=பிரணப்_முகர்ஜி&oldid=1059" இருந்து மீள்விக்கப்பட்டது