போபிந்தர் சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

லெப்டினன்ட் ஜெனரல் போபிந்தர் சிங் (Bhopinder Singh)(பிறப்பு 30 ஜூன் 1946) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் பாண்டிச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநரும், பரம் விசிட்ட சேவா பதக்கம் பெற்ற இந்தியத் தரைப்படை அதிகாரியும் ஆவார். குடியரசுத்தலைவர் கே. ஆர். நாராயணன் மற்றும் ஆ. பெ. ஜெ. அப்துல் கலாம் ஆகியோரின் முன்னாள் இராணுவச் செயலாளராக இருந்தார். அடிஸ் அபாபாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இராணுவ, கடற்படை மற்றும் விமான இணைப்பாளராக இருந்தார்.

சிங், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் துணைநிலை ஆளுநராக இருந்தார். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் முகுத் மிதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சிங் 13 மார்ச் 2008 அன்று நியமிக்கப்பட்டு மார்ச் 15 அன்று பதவியேற்றார்.[1]

2017ஆம் ஆண்டில், இவர் தனது பயோனெட்டிங் வித் ஒபினியன்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் 2019 ஆம் ஆண்டில் கண்டினியுங் ஒப்பீனியன் இன் டிபிகல்ட் டைம்சு (கடினமான நேரங்களின் தொடர்ச்சியான கருத்துக்கள்) எனும் மற்றொரு புத்தகத்தினையும் வெளியிட்டார் .

இவர் தேசியப் பாதுகாப்பு கல்லூரியின் பழைய மாணவர். தற்போது சண்டிகரில் வசித்துவருகிறார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:S-start வார்ப்புரு:Succession box வார்ப்புரு:Succession box வார்ப்புரு:End

"https://ta.bharatpedia.org/index.php?title=போபிந்தர்_சிங்&oldid=14809" இருந்து மீள்விக்கப்பட்டது