மதன் லால் குரானா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மதன் லால் குரானா (Madan Lal Khurana, 15 அக்டோபர் 1936 - 27 அக்டோபர் 2018)[1] ராஷ்டிரிய சுயம்சேவாக்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். தில்லி மாநிலத்தின் முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய பதவியில் இருந்தவர். மேலும் இராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவியில் சனவரி 2004 முதல் நவம்பர் 2004 முடியப் பதவி வகித்தவர். இந்தியப் பிரிவினையின் போது தற்கால பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் தலைநகரமான தில்லி மாநகரத்தின் கீர்த்தி நகரில் குடும்பத்துடன் அகதியாக குடியேறியவர்.[2] மதன்லால் குரானா தனது பட்டப்படிப்பை தில்லியின் கிரோரி மால் கல்லூரியில் முடித்தவர்.[3]

ஜன சங்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பு விஜய் குமார் மல்ஹோத்திராவுடன் மாலைநேரக் கல்லூரி ஆசிரியராக பணிபுரிந்தவர்.[2][4] பின்னர் தில்லி ஜன சங்கத்தின் பொதுச்செயலராக 1965 முதல் 1967 முடிய செயல்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநில முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய இருந்தவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அமைச்சராக செயல்பட்டவர். பின்னர் இராஜஸ்தான் மாநில ஆளுநராக 14 சனவரி 2004 முதல் 28 அக்டோபர் 2004 முடிய பதவி வகித்தவர். 9, 10, 12 மற்றும் 13வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Bharatiya Janata Party chief ministers

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=மதன்_லால்_குரானா&oldid=1971" இருந்து மீள்விக்கப்பட்டது