மாதவ்ராவ் சிந்தியா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மாதவராவ் சிவாஜிராவ் சிந்தியா (Madhavrao Jivajirao Scindia, 10 மார்ச் 1945 – 30 செப்டம்பர் 2001)[1] என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார். முன்னதாக, 1961 ஆம் ஆண்டில், இவருக்கு மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தின் சந்ததிப் பட்டம் வழங்கப்பட்டது. ஆனாலும், 1971 இல் அறிவிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தச்சட்டத்தின் படி,[2] இந்திய அரசு சுதேசிய இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை இல்லாதொழித்தது.[3][4][5][6][7][8][9][10]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

மாதவ்ராவ் குவாலியர் அரசின் கடைசி மகாராஜா சிவாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறந்தவர். இவர் தனது உயர்படிப்பை இலண்டன் வின்செசுட்டர் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு புதிய கல்லூரியிலும் கற்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன், தமது தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடலானார். 1971 இல் தனது 26-வது அகவையில் குவாலியரில் இருந்து மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இருந்து ஒன்பது தடவைகள் மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேர்தலிலும் இவர் தோற்றதில்லை. 1984 இல் இரயில்வே அமைச்சராக[11] ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1990 முதல் 1993 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

2001 செப்டம்பர் 30 இல் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார். கிங் ஏர் ச்-90 வானூர்தியில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவரக்ளில் ஊடகவியலாலர்கள் சஞ்சீவ் சின்கா (இந்தியன் எக்சுபிரசு), அஞ்சு சர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஆகியோரும் அடங்குவர்.[12]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. The Scindia Dynasty. Genealogy. Royal Ark. Retrieved on 14 November 2018.
  2. "The Constitution (26 Amendment) Act, 1971", indiacode.nic.in, Government of India, 1971, 9 November 2011 அன்று பார்க்கப்பட்டது<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Barbara Ramusack (2004). The Indian princes and their states. Cambridge University Press. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-26727-4. https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&pg=PA278. 
  4. {{cite book|last=Naipaul|first=V. S.|authorlink=[[வி. சூ. நைப்பால்|title=India: A Wounded Civilization|url=https://books.google.com/books?id=XYeWbmq7pkIC&pg=PT37%7Cdate= 2003|publisher=Random House Digital, Inc.|isbn=978-1-4000-3075-0|pages=37–38}}
  5. Schmidt, Karl J. (1995). An atlas and survey of South Asian history. M.E. Sharpe. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56324-334-9. https://books.google.com/books?id=FzmkFXSgxqgC&pg=PA78. 
  6. Breckenridge, Carol Appadurai (1995). Consuming modernity: public culture in a South Asian world. U of Minnesota Press. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8166-2306-8. https://books.google.com/books?id=LN4MN35b-r4C&pg=PA84. 
  7. Ramchandra Guha (2008). India After Gandhi: The History of the World's Largest Democracy. HarperCollins. பக். 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-06-095858-9. https://books.google.com/books?id=2fvd-CaFdqYC&pg=PA441. 
  8. Cheesman, David (1997). Landlord power and rural indebtedness in colonial Sind, 1865–1901. London: Routledge. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7007-0470-5. https://books.google.com/books?id=rtBi1MgVD0AC&pg=PA10. "The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles." 
  9. Merriam-Webster, Inc (1997). Merriam-Webster's geographical dictionary. Merriam-Webster. பக். 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-546-9. https://books.google.com/books?id=Co_VIPIJerIC&pg=PA520. 
  10. Ward, Philip (1989). Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide. Pelican Publishing. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88289-753-0. https://books.google.com/books?id=KubCD2jHjEsC&pg=PA91. 
  11. Railway Ministers. Irfca. Retrieved on 14 November 2018.
  12. "Madha vrao Sindia killed in plane crash". The Times of India. 1 October 2001. 10 March 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=மாதவ்ராவ்_சிந்தியா&oldid=1972" இருந்து மீள்விக்கப்பட்டது