மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை நியமன உறுப்பினர்கள் எனப்படுபவர்கள், மற்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்களை போல் அல்லாமல் நேரடியாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்படுகின்றனர்.குறிப்பாக கலை, இலக்கியம், சேவை மற்றும் விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிச் சாதனைகள் புரிந்த இந்திய குடிமகனாக உள்ளவரை நியமன உறுப்பினர்களாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உறுப்பினர்கள் பட்டியல்தொகு

இந்தியாவில் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர். அவர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சி அல்லது பொது நியமனம் போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 மணிசங்கர் அய்யர் இந்திய தேசிய காங்கிரஸ் 22-03-2010 முதல் 21-03-2016 வரை
2 ஜாவீத் அக்தார் நியமனம் 22-03-2010 முதல் 21-03-2016 வரை
3 சியாம் பெனகல் நியமனம் 16-06-2006 முதல் 15-06-2012 வரை
4 சோபனா பார்த்தியா நியமனம் 16-06-2006 முதல் 15-06-2012 வரை
5 ஹெச்.கே.துவா ஸ்ரீ நியமனம் 18-11-2009 முதல் 17-11-2015 வரை
6 டாக்டர் அசோக் எஸ்.கங்குலி நியமனம் 18-11-2009 முதல் 17-11-2015 வரை
7 பி.ஜெயஸ்ரீ நியமனம் 22-03-2010 முதல் 21-03-2016 வரை
8 டாக்டர். ராம் தயாள் முண்டா இந்திய தேசிய காங்கிரஸ் 22-03-2010 முதல் 21-03-2016 வரை
9 டாக்டர் பால்சந்திரா மங்கேகர் நியமனம் 22-03-2010 முதல் 21-03-2016 வரை
10 பேராசிரியர். எம்.எஸ்.சுவாமிநாதன் நியமனம் 10-04-2007 முதல் 09-04-2013 வரை
11 டாக்டர். கபிலா வாத்சாயன் நியமனம் 10-04-2007 முதல் 15-02-2012 வரை
12 காலியாக உள்ளது
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்கதொகு

மாநிலங்களவை வார்ப்புரு:மாநிலங்களவை