ராணி நாரா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ராணி நாரா (Ranee Narah பிறப்பு: அக்டோபர் 31, 1965) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் அசாம் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். [1] இவர் அசாம் மாநில அணியின் தலைவராக தொழில்முறை துடுப்படடம் விளையாடினார். [2] [3] இவர் பாரத் நாராவை மணந்தார். [4]

2006 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைக்கும் வரை நாரா இந்திய மகளிர்துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். [5] இவர் பி.சி.சி.ஐ மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தார். நாரா, அசாம் கால்பந்து சங்கம் மற்றும் அசாம் துடுப்பாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [6] [7]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

நாரா, தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசுடன் 1995 இல் தொடங்கினார். இவர் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் அசாம் பிரதேச இளைஞர் காங்கிரசின் தலைவர் ஆகிய பதவிகளை அடுத்தடுத்து வகித்தார்.[8] 1998 ல் அசாமில் உள்ள லக்கிம்பூர் தொகுதியின் மக்களவை பிரதிநிதியாக நாரா இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] பின்னர் இவர் மக்களவை உறுப்பினராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். [9] நாரா 2003 இல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [10] இவர் 2009 இல் மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸின் துணை தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். [11]

நாரா 2012 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டார். [12]

21 மார்ச் 2016 அன்று, நாரா 85 ல் 47 வாக்குகளைப் பெற்று (குறைந்தபட்ச தேவை 38) மாநிலங்களவைக்குத் தேர்வானார்.[13]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Smt. Ranee Narah". Government of India. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 2.0 2.1 Rajamani 2000.
  3. "Ex-cricketer clean bowls dissidence". Hindustan Times. 26 March 2009. 20 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Hereditary politics: Political families of India". இந்தியா டுடே. 12 April 2004. 27 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "WCAI to be disbanded shortly". ESPN Cricinfo. 13 November 2006. 20 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Women footballers honoured". The Assam Tribune. 10 November 2008. 28 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Dynamo Triumph". Yahoo. 6 August 2012. 28 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Smt. Ranee Narah". Government of India. 27 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Smt. Ranee Narah". Government of India. 27 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "Tribune News Service". The Tribune India. 17 July 2003. 28 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "Ranee deputy whip of LS". The Assam Tribune. 25 November 2009. 27 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. "Sportsperson-turned-politician Narah gets ministerial berth". Zee News. 28 October 2012. 29 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. http://indianexpress.com/article/india/india-news-india/assem-ahead-of-assembly-polls-congress-wins-both-rajya-sabha-seats-in-cross-voting/

 

"https://ta.bharatpedia.org/index.php?title=ராணி_நாரா&oldid=2086" இருந்து மீள்விக்கப்பட்டது