விஜயலட்சுமி பண்டித்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

விஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit), (ஆகஸ்ட் 18, 1900 - டிசம்பர் 1, 1990), இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.[1]

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.

இவரது மகள் நயந்தரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Wikiquote

வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள்

"https://ta.bharatpedia.org/index.php?title=விஜயலட்சுமி_பண்டித்&oldid=2622" இருந்து மீள்விக்கப்பட்டது