வி. பி. துரைசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. பி. துரைசாமி
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர்
பின்வந்தவர் அந்தியூர் செல்வராஜ்
தமிழக சட்டமன்றத்தின், துணை சபாநாயகர்
பதவியில்
19 மே 2006 – 14 மே 2011
தொகுதி சங்ககிரி
பதவியில்
8 பெப்ரவரி 1989 – 30 சனவரி 1991
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
திராவிட முன்னேற்ற கழகம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பணி அரசியல்வாதி

வி. பி. துரைசாமி (V. P. Duraisamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த இவரை, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.[1]

இவர் 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1995 - 2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார்.[2][3] இவர் 2012 திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.[4] பின்னர் திமுகவிலிருந்து விலகி, 2020 மே 22 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி... திமுக திசைமாறிச் செல்வதாக விமர்சனம்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> ஒன்இந்தியா தமிழ் (மே 22, 2020)
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. 2009-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "திமுக துணை பொதுச் செயலாளராக விபிதுரைசாமி". தினமணி. https://www.dinamani.com/latest-news/2011/oct/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-409910.html. பார்த்த நாள்: 22 May 2020. 
  5. "தமிழக அரசியல்: திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்". பிபிசி தமிழ். 22 May 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=வி._பி._துரைசாமி&oldid=1871" இருந்து மீள்விக்கப்பட்டது