வீரேந்திர குமார் காதிக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

வீரேந்திர குமார் காதிக் (Dr. Virendra Kumar Khatik) (பிறப்பு:27 பிப்ரவரி 1954) பாரதிய ஜனதா கட்சியின் தலித் அரசியல்வாதியான இவர் இந்தியாவின் 12, 13, 14, 15, 16 மற்றும் 17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, 1996 முதல் 2019 முடிய, மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மக்களவைத் தொகுதி மற்றும் திக்கம்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தேடுக்கப்பட்டவர்.[1] [2]

மத்திய இணை அமைச்சராக[தொகு | மூலத்தைத் தொகு]

நரேந்திர மோதியின் முதலாம் அமைச்சரவையில் இவர் 3 செப்டம்பர் 2017 – 29 மே 2019 வரை மகளிர் & குழந்தைகள் நலம் மற்றும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றியவர்.

மக்களவையின் இடைக்காலத் தலைவராக[தொகு | மூலத்தைத் தொகு]

16 சூன் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வீரேந்திர குமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். [3] [4]

புதிததாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட 17வது மக்களவை உறுப்பினர்களுக்கு, 17 & 18 சூன் 2019 அன்று, இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.[5]

19 சூன் 2019 அன்று கூடும் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தின் போது இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் தலைமையில் பதினேழாவது மக்களவைக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதுவரை வீரேந்திரகுமார் இடைக்கால சபாநாயகராகத் தொடர்வார்

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]