வீர் யக்யா தத் சர்மா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
வீர் யக்யா தத் சர்மா
Yagya Dutt Sharma.jpg
ஒடிசா ஆளுநர்
பதவியில்
7 பிப்ரவரி 1990 – 1 பிப்ரவரி 1993
முன்னவர் சைய்து நூருல் அசன்
பின்வந்தவர் சைய்து நூருல் அசன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1967–1971
முன்னவர் குமுக் சிங் முசாபிர்
பின்வந்தவர் துர்காதாசு பாதியா
தொகுதி அம்ரித்சர்
பதவியில்
1977–1980
முன்னவர் பிரபோத் சந்திரா
பின்வந்தவர் சுக்பன்சு கவுர் பிந்தர்
தொகுதி (குர்தாஸ்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 21, 1922(1922-09-21)
பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு 4 சூலை 1996(1996-07-04) (அகவை 73)
தேசியம் இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) பிரகாசுவதி சர்மா
பிள்ளைகள்
பிரேம் தத் சர்மாஅ
ஆராதண சர்மா
தொழில் அரசியல்வாதி

வீர் யக்யா தத் சர்மா (Yagya Dutt Sharma)(21 அக்டோபர் 1922, தகாத்கர் கிராமத்தில், ரோபர் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், இந்தியா – புது தில்லியில் ஜூலை 4, 1996) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னர் `பனார்சி தாஸ் சந்தன்' என்று அழைக்கப்பட்டார். இவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடையவர். பாரதிய ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினரான சர்மா, 1967-70 மற்றும் 1977-79 காலத்தில் பஞ்சாபில் உள்ள அம்ரித்சர் மற்றும் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்காவது மற்றும் ஆறாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பஞ்சாபின் மலைக் கிராமப் பகுதிகளில் (காங்க்ரா உனா ஹமிர்பூர் & சிம்லா) பாரதிய ஜன சங்கத்தை நிறுவியதில் இவரது பங்களிப்பு சிறப்புக் குறிப்புக்கு உரியது. சர்மா 1990 முதல் 1993 வரை ஒடிசாவின் ஆளுநராக பணியாற்றினார்.[1]

சர்மா, ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இவர் உள்நாட்டு மருத்துவ முறையை மேம்படுத்தவும், ஆயுர்வேத மருத்துவ முறையை மேம்படுத்தவும் பணியாற்றினார். 1943ஆம் ஆண்டு வங்காளத்திலும், 1945-46ல் காங்ரா-குலா பள்ளத்தாக்கிலும் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, பஞ்சாபிலிருந்து, மருத்துவர் குழுவுடன் சேர்ந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

இவர் 1947-ல் அகதிகளின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Brief History of Odisha Legislative Assembly Since 1937". ws.ori.nic.in. 2011. 23 April 2012 அன்று பார்க்கப்பட்டது. NAME OF THE GOVERNORS OF Odisha<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=வீர்_யக்யா_தத்_சர்மா&oldid=2743" இருந்து மீள்விக்கப்பட்டது