வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம்

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]காங்கேயம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெள்ளக்கோயிலில் இயங்குகிறது.வெள்ளக்கோயிலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எதற்கெடுத்தாலும் தாலுகா அலுவலக பணிக்காக காங்கயம் செல்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 48,065 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை நான்காக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. லெக்கமாணிக்கன்பட்டி
  2. மேட்டுப்பாளையம்
  3. நாகமநாயக்கன்பட்டி
  4. பச்சபாளையம்
  5. புதுப்பை
  6. வள்ளியரச்சல்
  7. வீரசோழபுரம்
  8. வேலம்பாளையம்
  9. வேலப்பநாயக்கன்பட்டி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வார்ப்புரு:திருப்பூர் மாவட்டம்