வைஜெயந்திமாலா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை வார்ப்புரு:Infobox person

வைஜெயந்திமாலா பாலி (Vyjayanthimala Bali, பிறப்பு: ஆகத்து 13, 1933) இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.

இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

திரைப்படத் துறையில்[தொகு | மூலத்தைத் தொகு]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Infobox Officeholder

1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:FilmfareBestActressAward

"https://ta.bharatpedia.org/index.php?title=வைஜெயந்திமாலா&oldid=2796" இருந்து மீள்விக்கப்பட்டது