ஹைபி ஈடன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹைபி ஈடன்
Hibi Eden.jpg
நாடாளுமன்ற உறுப்பினர் எர்ணாகுளம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் கே. வி. தாமஸ், இந்திய தேசிய காங்கிரசு
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2019
தொகுதி எர்ணாகுளம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
எர்ணாகுளம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) அண்ணா லிண்டா
பிள்ளைகள் கிளாரா
இருப்பிடம் புது தில்லி / கொச்சி

ஹைபி ஈடன் (Hibi Eden) (பிறப்பு: ஏப்ரல் 19, 1982) கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினருமாவார். எர்ணாகுளம் தொகுதியைச் சேர்ந்த நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த ஜார்ஜ் ஈடன் என்பவரின் மகனாவார்.

சுயசரிதை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், எர்ணாகுளம் மாவட்டத்திலிருந்து கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 2011 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய தேசிய காங்கிரசின் தேசிய மாணவர் பிரிவின் தலைவராகவும் இவர் உள்ளார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், கேரளாவின் எர்ணாகுளம் மக்களை உருப்பினரான மறைந்த ஜார்ஜ் ஈடன் என்பவருக்குப் பிறந்தார்.[3] (2003இல் அவர் பதவியிலிருக்கும் போதே இறந்தார்.)[4][5] 19 ஏப்ரல் 1982 இல். இவர் சிறு வயதிலேயே தனது தாயை இழந்தார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர்கள் இருவரையும் இவரது அத்தை வளர்த்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், மலையாளத் தொலைக்காட்சித் தொகுப்பாளரான அன்னா லிண்டா என்பவரை 2012 சனவரி 30 அன்று கலூர் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் 4 வருட காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிளாரா ஈடன் என்ற ஒரு மகள் 2012 நவம்பர் 27 அன்று பிறந்தார். மேலும் இவர், கத்தோலிக்க லத்தீன் சடங்கு வெராபோலி மறைமாவட்டம், எர்ணாகுளம் ஆகியவற்றின் பக்தியுள்ள உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2011 தேர்தல் பிரச்சாரத்தில் சசி தரூருடன் ஹைபி ஈடன்

இவர், தேவராவின் தூய இருதயக் கல்லூரியில் கேரள மாணவர் ஒன்றியத்தின் தலைமையிலான சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.[6] பின்னர் இவர் 2009 வரை நடைபெற்ற கேரள மாணவர் ஒன்றியத்தின் மாநிலக் குழுத் தலைவரானார். இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2009 இந்திய பொதுத் தேர்தலுக்கான எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நிற்க இவர் மிகவும் விரும்பினார்.

2011 கேரள சட்டமன்றத் தேர்தலில் 32,437 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர் எர்ணாகுளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள சட்டமன்றத்தின் இளைய உறுப்பினரானார். 2016 சட்டமன்றத் தேர்தலில், எர்ணாகுளம் தொகுதியிலிருந்து கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டாவது முறையாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] இவர், 21949 வாக்குகள் வித்தியாசத்தில் [8] வெற்றி பெற்றார். 2019 லோக்சபா தேர்தலில் இவர் மீண்டும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தனக்கு எதிராகப் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிம் (எம்) வேட்பாளர் பி ராஜீவுக்கு எதிராக 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [8]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Archive News". The Hindu.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Share/Stock Market News - Latest NSE, BSE, Business News, Stock/Share Tips, Sensex Nifty, Commodity, Global Market News & Analysis". Moneycontrol.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 3.0 3.1 Basheer, K.P.M. (March 16, 2009). "Archbishop's letter draws criticism. Rooting for Hibi termed interference in the political affairs of a party". The Hindu. Archived from the original on 7 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121107093259/http://www.hindu.com/2009/03/16/stories/2009031654280400.htm. பார்த்த நாள்: 17 March 2014. 
  4. "George Eden an outstanding politician". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Kochi). 29 July 2012. http://www.newindianexpress.com/cities/kochi/article578696.ece#.Uyc4OoWDmMU. பார்த்த நாள்: 17 March 2014. 
  5. "Dr Sebastian Paul _ Ernakulam MP/More a journalist than a politician". 1 November 2009. 2009-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 March 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  7. "Eranakulam Candidates Kerala Assembly Election 2016 & Results". Zee News. 24 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 January 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Ernakulam Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hibi Eden
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.bharatpedia.org/index.php?title=ஹைபி_ஈடன்&oldid=690" இருந்து மீள்விக்கப்பட்டது