அகத்தீஸ்வரம் வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்தீஸ்வரம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அகத்தீஸ்வரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த வட்டத்துக்கு உட்பட்ட சில வருவாய் கிராமங்கள்: வார்ப்புரு:Refbegin

  1. அகஸ்தீஸ்வரம்
  2. அழகப்பபுரம்
  3. தர்மபுரம்
  4. இரவிபுதூர்
  5. கன்னியாகுமரி
  6. கொட்டாரம்
  7. குலசேகரபுரம்
  8. மதுசூதனபுரம்
  9. மருங்கூர்
  10. நாகர்கோயில்
  11. நீண்டகரை 1
  12. நீண்டகரை 2
  13. பறக்கை
  14. சுசீந்திரம்
  15. தாமரைகுளம்
  16. தெங்கம்புதூர்
  17. தேரூர்
  18. வடசேரி
  19. வடிவீஸ்வரம்
  20. வேம்பனூர்

வார்ப்புரு:Refend

மக்கள்தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

278.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அகத்தீஸ்வரம் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,52,175 ஆகும். சராசரி எழுத்தறிவு 83.47% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1027 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,985 மக்கள் வாழ்கின்றனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.53% மற்றும் 0.17% ஆகவுள்ளனர்.[2]

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த வட்டத்துக்கு உட்பட்ட சில ஊர்கள் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளன. இந்த வட்டம் முழுவதும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. Agastheeswaram Taluka Population
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:கன்னியாகுமரி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=அகத்தீஸ்வரம்_வட்டம்&oldid=14043" இருந்து மீள்விக்கப்பட்டது