அமித் சா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அமித் சா
Shri Amit Shah taking charge as the Union Minister for Home Affairs, in New Delhi on June 01, 2019.jpg
இந்தியாவின் உள்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ராஜ்நாத் சிங்
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 சூலை 2014
முன்னவர் அத்வானி
பாரதிய ஜனதா கட்சி தலைவர்
பதவியில்
9 சூலை 2014 – 20 சனவரி 2020
முன்னவர் ராஜ்நாத் சிங்
பின்வந்தவர் ஜெகத் பிரகாஷ் நட்டா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் அத்வானி
தொகுதி காந்திநகர்
பெரும்பான்மை 8,94,624 (69.6%)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
19 ஆகத்து 2017 – 29 மே 2019
முன்னவர் திலிப் பாண்டியா
பின்வந்தவர் சுப்பிரமணியம் செயசங்கர்
தொகுதி குசராத்து
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் கௌசிக் படேல்
தொகுதி நாரன்புரா
பதவியில்
1997–2012
முன்னவர் ஹரிஸ்சந்திர படேல்
பின்வந்தவர் பதவி ரத்து செய்யப்பட்டது
தொகுதி சர்கேஜ்
மாநில அமைச்சர், குஜராத் அரசு
பதவியில்
2002–2012
துறை உள்துறை அமைச்சகம்
முதல்வர் நரேந்திர மோதி
தனிநபர் தகவல்
பிறப்பு அமித் அனில்சந்திர சா
வார்ப்புரு:Birth date and age
மும்பை, மகாராட்டிரம் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சோனல் சா
பிள்ளைகள் ஜெய் சா
படித்த கல்வி நிறுவனங்கள் குஜராத் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
இணையம் Script error: No such module "URL".

அமித் ஷா (வார்ப்புரு:Lang-en, பிறப்பு:1964) இந்திய உள்துறை அமைச்சர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.[1] மோதியின் குசராத் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட காவல்துறை மோதல் கொலைகள் வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.[2][3][4] 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.[5] இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சி பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.[6]

பிறப்பு, கல்வி, பணி[தொகு | மூலத்தைத் தொகு]

அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார்.[3] சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தொடக்கத்தில் இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும், பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். குசராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்.[7] 2002ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அமைச்சரவையில் குசராத்து மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித் சா மீது குற்றம் சாட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சரானார். 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட சிக்கலில் அமித் சாவின் பெயர் அடிபட்டது. காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் சா குசராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார். சொராப்தீன் சேக் கொலை வழக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

2014 இந்திய பொதுத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

சூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார்.[8][9] ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.[10][11] உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Amit Shah – Will Narendra Modi's Man Friday turn to be his nemesis?". Zeenews.india.com. 2013-12-04 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Sohrabuddin case: Gujarat minister Amit Shah resigns". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 July 2010. Archived from the original on 2013-12-24. https://web.archive.org/web/20131224135824/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-24/india/28305736_1_amit-shah-sohrabuddin-sheikh-sohrabuddin-case. 
  3. 3.0 3.1 "Who is Amit Shah?". NDTV. 12 June 2013. http://www.ndtv.com/article/people/who-is-amit-shah-378499?site=classic. 
  4. என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிப்பு
  5. "UPA govt responsible for country`s economic crisis: Amit Shah". Zeenews.india.com. 2013-12-04 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. யார் இந்த அமித் ஷா?
  7. "What Amit Shah's fall really means – Rediff.com India News". News.rediff.com. ஜுலை 28, 2010. மே 8, 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. Understanding the Amit Shah phenomenon, ஏப்ரல் 21, 2014
  9. BJP's master strategist made UP unit battle-ready in less than a year, Archis Mohan, New Delhi, ஏப்ரல் 21, 2014
  10. If BJP does well in Uttar Pradesh, credit goes to Amit Shah Rajiv Srivastava,TNN | மே 14, 2014
  11. अमित शाह: मोदी की चाह मेंअमित शाह में ऐसा क्या है कि वे आज नरेंद्र मोदी और भाजपा के लिए सबसे महत्वपूर्ण हैं? बृजेश सिंह, Tehelka, 2014-03-31, Issue 6, Volume 6
  12. பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=அமித்_சா&oldid=943" இருந்து மீள்விக்கப்பட்டது