நரேந்திர மோதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Update

நரேந்திர மோதி
PM Modi 2015.jpg
14 ஆவது இந்தியப் பிரதமர்
பதவியில்
26 மே 2014 – தற்போது வரை
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
ராம் நாத் கோவிந்த்
முன்னவர் மன்மோகன் சிங்
14 ஆவது குசராத்து முதல்வர்
பதவியில்
7 அக்டோபர் 2001 – 22 மே 2014
ஆளுநர் சுந்தர்சிங் பண்டாரி
கைலாசபதி மிசுரா
பல்ராம் சாக்கர்
நவால் கிசோர் சர்மா
எஸ். சி. ஜமீர்
கம்லா பெனிவால்
முன்னவர் கேசுபாய் படேல்
பின்வந்தவர் ஆனந்திபென் படேல்
வாரணாசி தொகுதி
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
முன்னவர் முரளி மனோகர் ஜோஷி
குசராத்து மாநில மணிநகர் தொகுதிக்கான
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 சனவரி 2002 – 16 மே 2014
முன்னவர் கமலேசு பட்டேல்
பின்வந்தவர் சுரேசு பட்டேல்
தனிநபர் தகவல்
பிறப்பு நரேந்திர தாமோதர்தாசு மோதி
வார்ப்புரு:Birth date and age
வாட்நகர், மும்பை, இந்தியா
(இன்றைய குசராத்து)வார்ப்புரு:நாட்டுத் தகவல் INDவார்ப்புரு:Namespace detect showall
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) யசோதாபென் (1968)
படித்த கல்வி நிறுவனங்கள் தில்லி பல்கலைக்கழகம்
குஜராத் பல்கலைக்கழகம்
கையொப்பம்
இணையம் Script error: No such module "URL".
Script error: No such module "URL".

நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோதி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்தார்.[1]

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதீ மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014 ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[2]

இளமைப் பருவம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.

குசராத்தின் முதல்வர்[தொகு | மூலத்தைத் தொகு]

அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001 இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

சர்ச்சைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர்.[3] இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[4][5][6] இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதீ உள்ளார்.[7][8][9][10] கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[10][11] குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[12] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[13]

2014 நாடாளுமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

பரப்புரை[தொகு | மூலத்தைத் தொகு]

2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் பதவி வேட்பாளர்[தொகு | மூலத்தைத் தொகு]

2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.[14]

  • வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜகவின் மக்களவைத் தலைவர்[தொகு | மூலத்தைத் தொகு]

பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.[15]


2019 மக்களவைத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர்.

இந்தியப் பிரதமர்[தொகு | மூலத்தைத் தொகு]

முதல் முறை[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோதீ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.[16]

இரண்டாம் முறை[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார்.[17][18][19][20]

Script error: No such module "main".

ஆட்சி முறை[தொகு | மூலத்தைத் தொகு]

  • அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.[21]
  • தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[22]

அரசுப் பணியில் மோதியின் இருபதாண்டுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

7 அக்டோபர் 2001 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குசராத் மாநில் முதலமைச்சராக பொது வாழ்க்கையில் பணி துவங்கிய நரேந்திர மோதி, 7 அக்டோபர் 2020 முதல் இருபதாம் ஆண்டில் நுழைந்துள்ளார். இருபதாண்டுகளில் நரேந்திர மோதி, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறையும், இந்தியப் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளார்.[23][24][25][26][27][28][29]

  • 2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர் தொகுதிகளில் 352 தொகுதிகளை கைப்பற்றியது. அதில் பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியதால், நரேந்திர மோதி மீண்டும் இந்தியப் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
  • 2014- 2020 ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 58 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூபாய் 518 செலவழிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதற்குமான புதிய வேளாண்மைச் சட்டம், 2020 இயற்றப்பட்டது.[30]

நூல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. சக்தி பாவ் (2015)
  2. சமூக நல்லிணக்கம் (2015)
  3. ஜோதி பூனா (2015)
  4. 'சமூக நல்லிணக்கம்' குஜராத்தி மொழியில் 'சமாஜிக் சம்ரஸ்தா' (2010)

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 http://www.elections.in/political-leaders/narendra-modi.html
  2. 'என் மனைவி யசோதா பென்': மோடி தகவலால் பரபரப்பு
  3. Harris, Gardiner (13 September 2013). "Divisive Nationalist to Lead Opposition in Indian Vote". த நியூயார்க் டைம்ஸ் (Ahmedabad). http://www.nytimes.com/2013/09/14/world/asia/polarizing-nationalist-to-lead-opposition-in-indian-elections.html. பார்த்த நாள்: 15 September 2013. 
  4. "Yes, I am a Hindu nationalist: Narendra Modi". India Express. 13 July 2013. http://www.indianexpress.com/news/yes-i-am-a-hindu-nationalist/1141243/. ""Modi said he described himself as a Hindu nationalist because he was born Hindu: "I am nationalist. I'm patriotic. Nothing is wrong. I am a born Hindu. Nothing is wrong. So I'm a Hindu nationalist so yes, you can say I'm a Hindu nationalist because I'm a born Hindu."" 
  5. Menon, Kalyani Devaki (2012). Everyday Nationalism: Women of the Hindu Right in India. University of Pennsylvania Press. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0812222340. "Yet, months after this violent pogrom against Muslims, the Hindu nationalist chief minister of Gujarat, Narendra Modi, went to the polls and won a resounding victory" 
  6. Mishra, Pankaj (2011). Kamala Visweswaran. ed. Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation. Wiley-Blackwell. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1405100625. "The chief minister of Gujarat, a young up-and-coming leader of the Hindu nationalists called Narendra Modi, quoted Isaac Newton to explain the killings of Muslims. “Every action”, he said, “has an equal and opposite reaction.”" 
  7. Nair, Rupam Jain (12 December 2007). "Edgy Indian state election going down to the wire". Reuters. Ahmedabad. Archived from the original on 30 செப்டம்பர் 2014. https://web.archive.org/web/20140930020457/http://www.reuters.com/article/2007/12/12/us-india-state-poll-idUSDEL17441120071212. பார்த்த நாள்: 10 October 2012. 
  8. Robinson, Simon (11 December 2007). "India's Voters Torn Over Politician". Time (Surat). Archived from the original on 24 ஆகஸ்ட் 2013. https://web.archive.org/web/20130824163112/http://www.time.com/time/world/article/0,8599,1693370,00.html. பார்த்த நாள்: 10 October 2012. 
  9. Burke, Jason (28 March 2010). "Gujarat leader Narendra Modi grilled for 10 hours at massacre inquiry". The Guardian (Delhi). http://www.guardian.co.uk/world/2010/mar/28/gujarat-narendra-modi-massacre-inquiry-india. பார்த்த நாள்: 10 October 2012. 
  10. 10.0 10.1 Buncombe, Andrew (19 September 2011). "A rebirth dogged by controversy". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html. பார்த்த நாள்: 10 October 2012.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Controversial_Independent" defined multiple times with different content
  11. David, Ruth (24 December 2007). "Controversial Gujarati Premier Confirmed in Office". Forbes. http://www.forbes.com/2007/12/24/narendra-modi-gujarat-face-markets-cx_rd_1224autofacescan01.html. பார்த்த நாள்: 10 October 2012. 
  12. Joseph, Manu (15 February 2012). "Shaking Off the Horror of the Past in India". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/02/16/world/asia/16iht-letter16.html. பார்த்த நாள்: 10 October 2012. 
  13. Jaffrelot, Christof (June 2013). "Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class". Studies in Indian Politics 1: Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class. 
  14. வதோதராவில் மோடி வேட்பு மனு தாக்கல்
  15. "I salute Constitution-makers, says Modi". த இந்து. 21 மே 2014. http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html. பார்த்த நாள்: 26 மே 2014. 
  16. "Modi now India's 15th PM". தி இந்து. 27 மே 2014. http://www.thehindu.com/news/national/modi-now-indias-15th-pm/article6050522.ece?homepage=true. பார்த்த நாள்: 27 மே 2014. 
  17. Narendra Modi sworn in for second term as India's Prime Minister
  18. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  19. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  20. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
  21. "100 days: Modi's first deadline to team". தி இந்து. 30 மே 2014. http://www.thehindu.com/news/national/100-days-modis-first-deadline-to-team/article6063352.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 30 மே 2014. 
  22. "Modi opposes move to include his life story in school syllabus". தி இந்து. 30 மே 2014. http://www.thehindu.com/news/national/modi-opposes-move-to-include-his-life-story-in-school-syllabus/article6064484.ece?homepage=true. பார்த்த நாள்: 30 மே 2014. 
  23. Modi completes 20 years as head of a government
  24. Reason for Modi’s longevity as an elected leader is his ability to challenge himself
  25. Narendra Modi as he enters 20th year as elected government head
  26. Two decades in office! PM Modi enters the 20th year as the head of a democratically-elected government
  27. PM Modi enters 20th year in public office
  28. https://www.dinamalar.com/news_detail.asp?id=2628494
  29. பிரதமர் மோடி புதிய மைல்கல்
  30. Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-inc வார்ப்புரு:S-end

வார்ப்புரு:இந்தியப் பிரதமர்கள்

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

வார்ப்புரு:Sangh Parivar [[

"https://ta.bharatpedia.org/index.php?title=நரேந்திர_மோதி&oldid=2355" இருந்து மீள்விக்கப்பட்டது