ஈ. வெ. கி. ச. இளங்கோவன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Refimprove வார்ப்புரு:Infobox Indian politician ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (ஆங்கிலம்: E. V. K. S. Elangovan, பிறப்பு: திசம்பர் 12, 1948) ஒர் தமிழக அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சரும் ஆவார்[1].

இளமைக் காலம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 2004 மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, (214477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு
2004 கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2009 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2014 திருப்பூர் மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2019 தேனி மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி

வகித்த பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Elangovan,Shri E.V.K.S." Lok Sabha. 17 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 May 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஈ._வெ._கி._ச._இளங்கோவன்&oldid=1069" இருந்து மீள்விக்கப்பட்டது