எதிர்க்கட்சித் தலைவர் (இந்தியா)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:இற்றை வார்ப்புரு:Infobox Political post

இந்திய எதிர்கட்சித் தலைவர் (Leader of the Opposition) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அலுவல்முறையாக அறிவிக்கப்படும் அரசியல்வாதி ஆவார்.

இந்தப் பதவி முந்தைய நடுவண் சட்டமன்றத்திலும் இருந்தாலும் 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகே அரசியலமைப்பு அங்கீகரித்த பதவியாக மாறியது. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களின் ஊதியம் மற்றும் படிகள் சட்டம் 1977 என்றறியப்படும் இந்தச் சட்டத்தின்படி மக்களவை அல்லது மாநிலங்களவையில் மிகவும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சியின் தலைவர் அந்த அவையின் எதிர்கட்சித் தலைவராக முறையே இந்திய மக்களவைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் அறிவிக்கப்படுகிறார்.[1][2] இருப்பினும், முறையான அங்கீகாரம் பெற, குறிப்பிட்ட கட்சி குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 10% ஆவது பெற்றிருக்க வேண்டும் (மக்களவையில் 54 உறுப்பினர்கள்). இதற்கு கீழாக இருந்தால் அவையில் அங்கீகரிகப்பட்ட எதிர்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவதில்லை.[1][3] இப்பதவிக்கான உரிமை ஒரு கட்சிக்கே உள்ளது; கட்சிகளின் கூட்டணிகளுக்கல்ல. எனவே தனிக்கட்சி ஒன்று 10% உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.[4]

ஆய அமைச்சருக்கான தகுதியை மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்களும் பெறுகின்றனர். முறையான எதிர்கட்சித் தலைவர் அறிவிக்கப்படாதவிடத்து எதிரணியில் உள்ள மிகப் பெரிய கட்சியின் தலைவர் எதிர்கட்சித் தலைவரின் பணிகளை மேற்கொள்வார். இருப்பினும் பெரிய கட்சியின் தலைவருக்கு அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவருக்கான ஊதியமும் படிகளும் வழங்கப்படுவதில்லை.[5]

இப்பதவியை அறிவிப்பதற்கான இந்த விதிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மரபுசார்ந்த ஒன்றாகும். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரின் ஊதியமும் படிகளும் சட்டம், 1977இல் பெரும்பான்மையை நிர்ணயிக்கும் அதிகாரம் குறிப்பிட்ட அவைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் பல முக்கியத்துவம் பெற்ற குழுக்களில் தமது பதவியின் காரணமாக இடம் பெறுகிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம், நடுவண் புலனாய்வுச் செயலகம் ஆகியவற்றின் இயக்குநர்களையும் லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களையும் முதன்மைத் தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்யும் குழுக்களில் அங்கம் வகிக்கிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம், 2003, பிரிவு 4, வெளிப்படையாக அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லாதவிடத்து மக்களைவில் பெரிய எதிர்கட்சியின் தலைவரை தேர்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.[6]

2014-இல் மக்களவை எதிர்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1977ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தது 10% மற்றும் அதற்கு மேலும் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க மக்களவைத் தலைவரால் இயலும். ஆனால் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி உட்பட எந்த எதிர்கட்சியும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்கவில்லை. எதிர்கட்சிகளில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மட்டும் அதிகமாக பட்சமாக 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருப்பதால், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி தலைவர் பதவி கோருவதை, மக்களவைத் தலைவரால் ஏற்க இயலாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.[7][8]

மக்களவை எதிர்கட்சித் தலைவர்களின் பட்டியல்[தொகு | மூலத்தைத் தொகு]

பெயர் கட்சி பதவிக்காலம் மக்களவை
வெற்றிடம்[9] அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை[10] 26 சனவரி 1952 – 4 மார்ச் 1967 முதல்
இரண்டாம்
மூன்றாம்
வெற்றிடம்[11] அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை 4 மார்ச் 1967 – 12 திசம்பர் 1969 நான்காவது
ராம் சுபாக் சிங் இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்) 17 திசம்பர் 1969 – 27 திசம்பர் 1970
வெற்றிடம் அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை 27 திசம்பர் 1970 – 31 சூன் 1977 ஐந்தாவது
யசுவந்த்ராவ் சவான் இந்திய தேசிய காங்கிரசு 1 சூலை 1977– 11 ஏப்ரல் 1978 ஆறாவது
சி. எம். இசுடீபன் 12 ஏப்ரல் 1978 – 9 சூலை 1979
யசுவந்த்ராவ் சவான் 10–28 சூலை 1979
ஜெகசீவன்ராம் ஜனதா கட்சி 29 சூலை – 22 ஆகத்து 1979
வெற்றிடம் அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை[10] 22 ஆகத்து 1979 – 18 திசம்பர் 1989 ஏழாவது
எட்டாவது
ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசு 18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990 ஒன்பதாவது
லால் கிருஷ்ண அத்வானி பாரதிய ஜனதா கட்சி 24 திசம்பர் 1990 – 13 மார்ச் 1991
21 சூன் 1991 – 26 சூலை 1993 பத்தாவது
அடல் பிகாரி வாச்பாய் 26 சூலை 1993 – 10 மே 1996
பி. வி. நரசிம்ம ராவ் இந்திய தேசிய காங்கிரசு 16–31 மே 1996 பதினோராவது
அடல் பிகாரி வாச்பாய் பாரதிய ஜனதா கட்சி 1 சூன் 1996 – 4 திசம்பர் 1997
சரத் பவார் இந்திய தேசிய காங்கிரசு 19 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999 பன்னிரெண்டாவது
சோனியா காந்தி 13 அக்டோபர் 1999 – 6 பெப்ரவரி 2004 பதின்மூன்றாவது
லால் கிருஷ்ண அத்வானி பாரதிய ஜனதா கட்சி 22 மே 2004 – 18 மே 2009 பதினான்காவது
சுஷ்மா சுவராஜ் 21 திசம்பர் 2009 - 19 மே 2014 பதினைந்தாவது
வெற்றிடம் அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை 4 சூன் 2014 - இன்றளவில் பதினாறாவது
மூலம்:[12]

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

மாநிலங்களவையில் 1969 வரை எதிர்கட்சித் தலைவர் என்று ஒருவரும் அறியப்படவில்லை. அதுவரை எதிரணியில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், எந்தவொரு அங்கீகாரமோ, தகுதியோ, உரிமைகளோ இன்றி, எதிர்கட்சித் தலைவர் என அழைக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு பின்னரே இந்தப் பதவி முறையாக வரையறுக்கப்பட்டது. இதன்படி எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்: (i) அவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் (ii) மாநிலங்களவையில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அரசுக்கு எதிரான கட்சியின் தலைவராக இருத்தல் வேண்டும். (iii) மாநிலங்களையின் அவைத்தலைவரால் (இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மாநிலங்களையில் எதிர்கட்சித் தலைவர்களாக பொறுப்பேற்றவர்களின் பட்டியல்:[13]

பெயர் கட்சி பதவிக்காலம்
1 சியாம் நந்தன் மிஸ்ரா பிற திசம்பர் 1969 - மார்ச்சு 1971
2 எம். எஸ். குருபாதசாமி பிற மார்ச்சு 1971 - ஏப்ரல் 1972
3 கமலபதி திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு மார்ச்சு 30, 1977 - பெப்ரவரி 15, 1978
4 போலா பாசுவன் சாத்திரி இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்) February 24, 1978 - March 23, 1978
5 கமலபதி திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு மார்ச்சு 23, 1978 - சனவரி 8, 1980
6 லால் கிருஷ்ண அத்வானி பாரதிய ஜனதா கட்சி சனவரி 21, 1980 - ஏப்ரல் 7, 1980
7 பி. சிவசங்கர் இந்திய தேசிய காங்கிரசு திசம்பர் 18, 1989
8 எம் எஸ் குருபாதசாமி பிற சூன் 28, 1991 - சூலை 21, 1991
9 எஸ். ஜெய்பால் ரெட்டி காங்கிரசு கட்சி (எதிர்ப்பாளர்) சூலை 22, 1991 - சூன் 29, 1992
10 சிக்கந்தர் பக்த் பாரதிய ஜனதா கட்சி சூலை 7, 1992 - மே 23, 1996
11 சங்கர்ராவ் சவான் இந்திய தேசிய காங்கிரசு மே 23, 1996 - சூன் 1, 1996
12 சிக்கந்தர் பக்த் பாரதிய ஜனதா கட்சி சூன் 1, 1996 - மார்ச்சு 19, 1998
13 மன்மோகன் சிங் இந்திய தேசிய காங்கிரசு மார்ச்சு 21, 1998 - மே 21, 2004
14 ஜஸ்வந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி சூன் 3, 2004 - 16 மே 2009
15 அருண் ஜெட்லி பாரதிய ஜனதா கட்சி சூன் 3, 2009 – மே 2014
16 குலாம் நபி ஆசாத் இந்திய தேசிய காங்கிரஸ் சூன் 2014 -

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "Salary and Allowances of Leaders of Opposition in Parliament Act, 1977". Ministry of Parliamentary Affairs, Government of India. 16 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிழை காட்டு: Invalid <ref> tag; name "Salary and Allowances of Leaders of Opposition in Parliament Act, 1977" defined multiple times with different content
  2. [1]
  3. Parliament Of India. Legislativebodiesinindia.nic.in. Retrieved on 2014-05-21.
  4. http://www.thehindu.com/news/national/new-house-cannot-have-opposition-leader/article6034355.ece
  5. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2003-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுப்பு: சட்ட விதிகளுக்கு உள்பட்ட முடிவுதான்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. மக்களவை விதிமுறைகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை : சுமித்ரா மகாஜன்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. முதல் மக்களவையில் அலுவல்முறையில் அல்லாது ஏ. கே. கோபாலன் எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
  10. 10.0 10.1 http://www.rediff.com/news/column/ls-election-no-leader-of-oppn-there-wasnt-any-in-nehru-indira-rajiv-days/20140523.htm
  11. அலுவல்முறையில் அல்லாது என். ஜி. ரங்கா ( சுதந்திராக் கட்சி) எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
  12. Lok Sabha. Legislativebodiesinindia.nic.in. Retrieved on 2014-05-21.
  13. [2]