எம். கே. விஷ்ணு பிரசாத்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆரணி மக்களவைத் தொகுதியின், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.[1]

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகனும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும் ஆவார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செய்யாறு தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஆரணி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._கே._விஷ்ணு_பிரசாத்&oldid=1668" இருந்து மீள்விக்கப்பட்டது