கிரிஜா வியாஸ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கிரிஜா வியாஸ் Girija Vyas
Dr. Girija Vyas takes over the charge of Union Minister for Housing & Urban Poverty Alleviation, in New Delhi on June 18, 2013.jpg
வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சர்
பதவியில்
17 ஜீன் 2013 – 26 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் அஜய் மக்கான்
பின்வந்தவர் வெங்கையா நாயுடு
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
நத்ட்வர்தா, இராஜ்புட்டனா நிலையம்,
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

கிரிஜா வியாஸ் (Girija Vyas) ஒரு இந்திய அரசியல்வாதி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 15வது மக்களவைக்கு, சிட்டர்கர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் செயல்பட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

கிரிஜா வியாஸ் 1946 ஜூலை 8 ஆம் தேதி கிருஷ்ணா சர்மா மற்றும் ஜமுனா தேவி வியாஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, உதய்பூர் மோகன்லால் சுகதியா பல்கலைக்கழகம் மற்றும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார், இவற்றில் மூன்று புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாகும். எஹ்சாஸ் கி பர் என்பது உருது கவிதைப் புத்தகமாகும், சீப், சமுந்தர் மோதி என்னும் கவிதைப் புத்தகத்தில் இந்தி மற்றும் உருது கவிதைகள் உள்ளன; (நினைவுகள்) நாஸ்டால்ஜியா ஆங்கில வசனங்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

1985ஆம் ஆண்டில், இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, ராஜஸ்தானின் உதய்பூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1990 வரை ராஜஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். [1]

1991 ஆம் ஆண்டில், இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ராஜஸ்தானின் உதய்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் அரசாங்கத்தில் துணை அமைச்சராக (தகவல் மற்றும் ஒளிபரப்பு) நியமிக்கப்பட்டார்.

  • 1993 முதல்: தலைவர், அகில இந்திய மகிளா காங்கிரஸ்;
  • 1993-96: உறுப்பினர், ஆலோசனைக் குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்; உறுப்பினர், வீடு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நிலைக்குழு
  • 1996: 11வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
  • 1996 முதல்: உறுப்பினர், தேசிய மொழிக்கான குழு; உறுப்பினர், பெண்கள் மேலாதிக்க குழு; உறுப்பினர், பெட்ரோலியம் நிலைக்குழு; உறுப்பினர், ஆலோசனைக் குழு, உள்துறை அமைச்சகம்
  • 1999: 13வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3வது முறை)
  • 1999-2000: உறுப்பினர், பெட்ரோலியம் மற்றும் இரசாயனங்கள் குழு

2001-2004 வரை, அவர் ராஜஸ்தான் மாகாண காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இருந்தார் . தற்போது, அவர் ஊடகத் துறை, அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவர் மற்றும் இந்தோ-ஐரோப்பிய ஒன்றிய சிவில் சொசைட்டி உறுப்பினராக உள்ளார்.

பிப்ரவரி 2005இல், காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கின் யுபிஏ அரசாங்கத்தில் முக்கியமானவராக இருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் ஐந்தாவது தலைவராகச் செயல்பட்டார் (01.08.2011 வரை).

2008 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2013இல் வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Archived copy". 5 October 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 November 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:S-start

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=கிரிஜா_வியாஸ்&oldid=1905" இருந்து மீள்விக்கப்பட்டது