கும்பகோணம் மாநகராட்சி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கும்பகோணம் மாநகராட்சி
வகை
வகை
தலைமை
மாநகராட்சி மேயர்
சரவணன் 04 மார்ச்2022 முதல்
துணை மேயர்
சு.ப. தமிழழகன் 04 மார்ச் 2022 முதல்
மாநகராட்சி ஆணையாளர்
செந்தில் முருகன் முதல்
கூடும் இடம்
[மாநகர மண்டபம்]

கும்பகோணம் மாநகராட்சி (Kumbakonam City Corporation) என்பது இந்தியாவில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். 15 அக்டோபர் 2021 அன்று 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் மாநகராட்சியை நிறுவ தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1][2]

கும்பகோணம் நகராட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

கும்பகோணம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011-ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

  • மாநகராட்சி மேயர்* ரா.சரவணன்.(காங்கிரஸ்)
  • துணை மேயர்* சு.ப. தமிழழகன்.(திமுக)
  • மாநகராட்சி ஆணையர்* ம.செந்தில்முருகன்.

மாநகராட்சிப் பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் கும்பகோணம் நகராட்சி, தாராசுரம் பேரூராட்சி, வலையப்பேட்டை ஊராட்சியின் பகுதிகள், பாபுராஜபுரம் ஊராட்சியின் பகுதிகள், அசூர் ஊராட்சியின் பகுதிகள் , பழவந்தான்கட்டளை ஊராட்சி, பெருமாண்டி ஊராட்சி முழுமையாக, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி முழுமையாக, சாக்கோட்டை ஊராட்சி முழுமையாக, உமாமகேஸ்வரபுரம் ஊராட்சியின் பகுதிகள், தேப்பெருமாநல்லூர் ஊராட்சியின் பகுதிகள், ஏராகரம் ஊராட்சியின் பகுதிகள் மற்றும் மலையப்பநல்லூர் ஊராட்சியின் பகுதிகளைக் கொண்டது.

மாநகராட்சி பரப்பளவு[தொகு | மூலத்தைத் தொகு]

கும்பகோணம் நகராட்சி-யாக செயல்பட்டபோது சுமார் 12.58 சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு சுமார் 42.95 சதுர கிலோ மீட்டராக உள்ளது. மற்றும் 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

மாநகராட்சி தேர்தல், 2022[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 2022-ஆம் ஆண்டில் இம்மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 42 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன் மற்றும் திமுகவின் தமிழழகன் துணை மேயராக வெற்றி பெற்றனர்.[3]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கும்பகோணம் நகரத்தின் மையத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது.

  • கணித மேதை சீனிவாச இராமானுசன் வாழ்ந்த இல்லம் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் நினைவு இல்லமாக அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தஞ்சாவூர் மாவட்டம்