கேவல் குமார் சர்மா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கேவல் குமார் சர்மா (Kewal Kumar Sharma) 1983 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சம்மு காசுமீரின் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். சம்மு-காசுமீர் ஒன்றியப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, துனைநிலை ஆளுநர் கிரிசு சந்திர முர்மு மற்றும் தற்போதைய துணைநிலை ஆளுநர் மனோச் சின்கா ஆகியோரின் ஆலோசகராகவும் இருந்தார்.[1][2] 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இவர் சம்மு காசுமீர் தொழில்நுட்பக் கல்வி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] கேவல் குமார் சர்மா சண்டிகர் மாநிலத்தின் நிர்வாக ஆலோசகர், கோவாவின் தலைமைச் செயலாளர் மற்றும் தில்லியின் தலைமைச் செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்னர் இவர் செயலாளராக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.[4][5]

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

கே.கே.சர்மா என்ற பெயராலும் அறியப்படும் இவர் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த கதுவா மாவட்டத்திலிருக்கும் பில்லாவர் நகரத்தைச் சேர்ந்தவராவார்.[5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Present Advisors to Lieutenant Governor". General Administration Department. Government Of Jammu & Kashmir. 13 May 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2020-08-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Govt appoints retired bureaucrats as advisors to LG of J&K - ET Government". ETGovernment.com (in English). 14 November 2019. 2020-08-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "J-K LG Advisor KK Sharma to head reconstituted Board of Technical Education". The Indian Express (in English). 2020-02-27. 2020-08-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Centre Removes Delhi Chief Secretary Kewal Kumar Sharma". NDTV. PTI. 24 November 2016. 2020-08-11 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: others (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. 5.0 5.1 "K K Sharma, Farooq Khan appointed Advisors to Lt Governor of J&K UT". Daily Excelsior (in English). 2019-11-14. 2020-08-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கேவல்_குமார்_சர்மா&oldid=1157" இருந்து மீள்விக்கப்பட்டது