கே. டி. கே. தங்கமணி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கே. டி. கே. தங்கமணி (K. T. K. Thangamani, மே 19, 1914[1] - டிசம்பர் 26, 2001) இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார், தமிழ்நாடு, மதுரை மாவட்டம்[2], திருமங்கலத்தைச்[1][3] சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சட்டப்படிப்பை இலண்டனில் முடித்து 1947ம் ஆண்டு மதுரை திரும்பினார். இங்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றுள்ளார்[4]. மேலும் 1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பதவி வகித்தார்[5].

மறைவு மற்றும் நினைவகம்[தொகு | மூலத்தைத் தொகு]

தன் 88ஆவது வயதில் 2001 டிசம்பர் 26 அன்று கோவையில் மரணமடைந்தார். இவரது நினைவாக, மதுரை அண்ணாநகா் மற்றும் அச்சம்பத்திலுள்ள ஒரு தெருவிற்கும் மற்றும் திருமங்கலத்திலுள்ள ஒரு சந்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. இவர் கோவையில் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

தங்கமணியின் வாழ்க்கையைப்பற்றி ஓயாது உழைத்த உத்தமர் என்ற நூலை ஆளவந்தார் எழுதியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 http://www.barcounciloftamilnadupuducherry.com/search.php?search=search&&back=ok&limit_str=56030&limit_end=10&pager=5605
  2. http://books.google.co.in/books?id=32tA0QGMCiQC&pg=PA17&lpg=PA17&dq=K.+T.+K.+Thangamani&source=bl&ots=gbsK3fP8Ni&sig=AwG-TUWqq4SN-FZUYEYeieJgMvk&hl=en&sa=X&ei=M25NU-e9GManrgfCvoCoBw&ved=0CDQQ6AEwAzgK#v=onepage&q=K.%20T.%20K.%20Thangamani&f=false
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-07-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._டி._கே._தங்கமணி&oldid=2667" இருந்து மீள்விக்கப்பட்டது