சாகிப் சிங் வர்மா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

சாகிப் சிங் வர்மா (Sahib Singh Verma) இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும் (1996–1998), இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் (1999–2004) பணியாற்றியவர்.[2] இந்திய நடுவண் அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.[3]

சாகிப் சிங் வர்மா தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 30 சூன் 2007-இல் இறந்தார்.

இளமையும் கல்வியும்[தொகு | மூலத்தைத் தொகு]

சாகிப் சிங் வர்மா ஜாட் இன வேளாண்மைக் குடும்பத்தில், மீர் சிங் – பார்பாய் தேவி இணையருக்கு 15 மார்ச் 1943-இல் தில்லி அருகே முண்டகா எனும் கிராமத்தில் பிறந்தவர்.

சாகிப் சிங் வர்மா இளமையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து சமூக – அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.[4]

முதுகலை பட்டப்படிப்பு முடித்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.[5][6] பின்னர் தில்லி சாகித் பகத் சிங் கல்லூரியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.[7]

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

சாகிப் சிங் வர்மா 1977-இல் தில்லி மாநகராட்சி தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். சாகிப் சிங் வர்மா 1993-இல் மதன் லால் குரானா அமைச்சரவையில் தில்லி மாநில கல்வி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1996-இல் ஊழல் வழக்கில் மதன் லால் குரான பதவி விலகியதை அடுத்து, சாகிப் சிங் வர்மா தில்லி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.[8] தில்லியில் வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தின் காரணமாக சாகிப் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1999-இல் தில்லி புறநகர் தொகுதியிலிருந்து சாகிப் சிங் வர்மா இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2002-இல் அடல் பிகார் வாஜ்பாய் அமைச்சரவையில், இந்திய நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Office Bearers". BJP. 8 ஏப்ரல் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 July 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". 2013-06-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Ranjan, Amitav (21 September 2003). "Sahib Singh wanted to visit Serbia to meet fellow Jats". The Indian Express. http://www.indianexpress.com/oldStory/31955/. பார்த்த நாள்: 11 May 2013. 
  4. Tribune News Service (23 September 2007). "Navjot Sidhu calls for Jat unity". The Tribune (Chandigarh) (Dharamsala). http://www.tribuneindia.com/2007/20070924/himachal.htm#5. பார்த்த நாள்: 26 February 2013. 
  5. http://www.amu.ac.in/pro.jsp?did=10065&lid=Prominent%20Alumni
  6. https://www.quora.com/Why-is-Aligarh-Muslim-University-AMU-so-communal
  7. "Former Delhi CM Sahib Singh Verma dies in road accident". Deccan Herald. 30 June 2007. Archived from the original on 2 ஜூலை 2007. https://web.archive.org/web/20070702164015/http://www.deccanherald.com/Content/Jun302007/national2007063010305.asp?section=updatenews. பார்த்த நாள்: 4 July 2007. 
  8. The Hindu[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Swarup, Harihar (10 October 1999). "Long-standing rivals now compete for Cabinet berths" (Editorial). Tribune India. http://www.tribuneindia.com/1999/99oct10/edit.htm. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=சாகிப்_சிங்_வர்மா&oldid=2109" இருந்து மீள்விக்கப்பட்டது