சா. ஞானதிரவியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சா. ஞானதிரவியம் (S. Gnanathiraviyam) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 17 ஆவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனை விட 1,85,457 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[2]

இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், ஆவரைக்குளத்தைச் சார்ந்தவர். 1998 முதல் 2002 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும், 2011 முதல் 2016 வரை ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: தூத்துக்குடியில் கனிமொழி போட்டி". BBC News Tamil. 18 மார்ச் 2019. 27 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Constituencywise Results". Election Commission of India. 2019-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "சா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா?". one india tamil. 27 மார்ச் 2019. 27 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சா._ஞானதிரவியம்&oldid=2494" இருந்து மீள்விக்கப்பட்டது