சுரவரம் சுதாகர் ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரவரம் சுதாகர் ரெட்டி
SUDAKAR REDDY DSC 0686.JPG
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
2012 மார்ச் 31 – 2019 சூலை 21
முன்னவர் அ. பூ. பர்தன்
பின்வந்தவர் து. ராஜா
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னவர் சுகேந்தர் ரெட்டி
பின்வந்தவர் சுகேந்தர் ரெட்டி
தொகுதி நல்கொண்டா
பதவியில்
1998–1999
முன்னவர் பொம்மகானி தர்ம பீக்சம்
பின்வந்தவர் சுகேந்தர் ரெட்டி
தொகுதி நல்கொண்டா மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மகபூப்நகர், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போதைய தெலங்காணா, இந்தியா)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி சிபிஐ
வாழ்க்கை துணைவர்(கள்) மருத்துவர். பி. வி. விஜய லட்சுமி
பிள்ளைகள் இரு மகன்கள்
இருப்பிடம் ஐதராபாத்து (இந்தியா)
As of 26 செப்டம்பர், 2006
Source: [1]

சுரவரம் சுதாகர் ரெட்டி (Suravaram Sudhakar Reddy) இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் [1] பொதுச் செயலாளராக இருந்தார். இவர் பதினான்காவது மக்களவையின் தன்னுடைய கட்சியின் 12 ஒரு உறுப்பினர்களில் ஒருவராகராக தெலங்காணாவின் நல்கொண்டா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலை அமைப்பதற்கான போராட்டத்தில் இவர் முன்னணியில் இருந்தார்.

ஆரம்ப ஆண்டுகள் மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

1942 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆந்திராவின் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பூர் குஞ்ச்போட் என்ற கிராமத்தில் தெலங்காணா ஆர்வலர் சுரவரம் வெங்கடராமரெட்டி என்பவருக்குப் பிறந்தார். [2] கர்நூலில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் கோல்ஸ் நினைவு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964 ஆம் ஆண்டில் கர்நூல் உசுமானியா கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், 1967 ஆம் ஆண்டில் ஐதராபாத் உசுமானியா பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார்.

இவர் அருகிலுள்ள கர்நூல் மாவட்டத்தில் கல்வி பயின்றார். வெங்கடேசுவர பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​அகில இந்திய மாணவர் பேரவையின் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். கல்லூரி ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய மாணவர் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவராகவும் இருந்துள்ளார்.

பொதுவுடமைக் கட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் பொதுவுடமைக் கட்சியின் (சிபிஐ) பொதுச் செயலாளராக பணியாற்ற 2012 மார்ச் 31 அன்று நடைபெற்ற 21 வது கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.

இவருக்கு 15 வயதாக இருந்தபோது, ஆந்திராவின் கர்நூலில் உள்ள தனது பள்ளிக்கு கரும்பலகைகள், சுண்ணாம்பு மற்றும் புத்தகங்களைத் தேடும் போராட்டத்தில் இவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார். இவ்வியக்கம் பரவி கர்னூல் முழுவதும் உள்ள பள்ளிகள் இதே போன்ற கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கின. ரெட்டி பின்னர் நல்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பல பொதுசன போராட்டங்களின் தலைவராக கட்சிக்குள்ளும், வெளியேயும் பரவலாக போற்றப்பட்டார்.

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவரது மனைவி பி.வி. விஜயலட்சுமி, உழைக்கும் மகளிர் அமைப்பின் தேசிய செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய உறுப்பினருமவார். இவர்களுக்கு நிகில் மற்றும் கபில் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 24 அக்டோபர் 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 21 மே 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. లోకసభ జాలగూడు[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]