ஜிதின் பிரசாதா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜிதின் பிரசாதா
Jitin Prasada addressing at the celebration of the 8th Foundation Day of the National Commission for Minority Educational Institutions, in New Delhi on December 28, 2012.jpg
2012இல் ஜிதின் பிரசாதா
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
2012 அக்டோபர் 12 – 2014 மே
பிரதமர் மன்மோகன் சிங்
தொகுதி தௌரக்ரா , உத்தரப் பிரதேசம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
பதவியில்
2011 சனவரி 19 – 2012 அக்டோபர் 28
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
பதவியில்
2009 மே – 2011 சனவரி 18
உருக்குத் துறை அமைச்சார்
பதவியில்
2008 ஏப்ரல் – 2009 மே
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
சாஜகான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) நேகா செத்
இருப்பிடம் சாஜகான்பூர்
As of 2009 சூலை 30
Source: [1]

ஜிதின் பிரசாதா (Jitin Prasada) (பிறப்பு: நவம்பர் 29, 1973) இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் மனிதவளத் துறை அமைச்சர் ஆவார். இவர் பதினைந்தாவது மக்களவையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் தௌரக்ராவை (மக்களவைத் தொகுதி) பிரதிநிதித்துவப்படுத்தினார் .[1].அங்கு இவர் 1,84,509 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜிதின் அரசியல்வாதியான ஜிதேந்திர பிரசாதா மற்றும் அவரது மனைவி காந்தா பிரசாதா ஆகியோருக்கு உத்தரபிரதேசத்தின் சாஜகான்பூரில் பிறந்தார். இவரது தாய் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஜிதின் தேராதூனிலுள்ள தூன் பள்ளியில் படித்தார் [3] [4] [5] [6] தில்லி பல்கலைக்கழகத்தின் சிறிராம் வணிகக் கல்லூரியில் இளங்கலையை முடித்தார். பின்னர், புது தில்லி, சர்வதேச மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிகம் முடித்தார்.

இவரது தாத்தா ஜோதி பிரசாதா காங்கிரசு கட்சி உறுப்பினராக இருந்து சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றினார். இவரது பாட்டி பமீலா பிரசாதா கபுர்த்தலாவின் சீக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ஜுவாலா பிரசாதா ஒரு காலனித்துவ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். மேலும் இவரது பெரிய பாட்டி பூர்ணிமா தேவி, நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஹேமந்திரநாத் தாகூரின் இளைய மகள் ஆவார்.  

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2001 ஆம் ஆண்டில், ஜிதின் பிரசாதா இந்திய இளைஞர் காங்கிரசின் இளைஞர் பிரிவின் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டில், தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சாஜகான்பூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து 14ஆவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதின் பிரசாதா எஃகு துறைக்கு அமைச்சரானார். மேலும் அமைச்சரவையில் (ஏப்ரல் 2008) இளைய அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில், தனது சொந்தத் ஹொகுதியான சாஜகான்பூர் வரையறுக்கப்பட்டதால், இவர் தௌரக்ராவிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் இவர் தனது தொகுதியான தௌரக்ராவில் (மக்களவைத் தொகுதி) ஒரு எஃகு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். [7]

லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் குறுகிய ரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றுவதற்கான இவரது வாக்குறுதி 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இவருக்கு பெரும் ஆதரவளித்தது. 14 வது மக்களவைக்கு, மனுக்களுக்கான குழு (உறுப்பினர்) பதவிகளை ஜிதின் வகித்தார்; தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குழு (உறுப்பினர்); ஆலோசனைக் குழு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எஃகு அமைச்சகம் போன்றவை.

2014 மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் ரேகா வர்மாவிடம் இவர் தனது தொகுதியை இழந்தார். [8] [9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஜிதின் பிரசாதா பிப்ரவரி 2010 இல் பத்திரிகையாளரான நேகா சேத் என்பவரை மணந்தார். நேகா டைம்ஸ் ஆஃப் இந்தியா, மற்றும் சிஎன்என்-ஐபிஎன் போன்ற செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Priya Sahgal. "The Rahul offensive". India Today. 2 April 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". Ibnlive.in.com. 31 May 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 April 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "To the manner born? - Indian Express". Archive.indianexpress.com. 2 April 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Doon squad - Indian Express". Archive.indianexpress.com. 2 April 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Lok Sabha polls 2004: Power families in Parliament". India Today. 2 April 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Archived copy". 12 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. https://resultuniversity.com/election/dhaurahra-lok-sabha
  8. https://www.news18.com/lok-sabha-elections-2019/uttar-pradesh/dhaurahra-election-result-s24p29/
  9. https://www.elections.in/results/dhaurahra-up.html

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜிதின்_பிரசாதா&oldid=2201" இருந்து மீள்விக்கப்பட்டது