தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980

← வார்ப்புரு:Delink question hyphen-minus மே 28, 1980 வார்ப்புரு:Delink question hyphen-minus →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  Flag of AIADMK.svg Flag DMK.svg
தலைவர் ம. கோ. இராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்
கூட்டணி அதிமுக திமுக
தலைவரின் தொகுதி மதுரை மேற்கு அண்ணா நகர்
வென்ற தொகுதிகள் 162 69
மாற்றம் +14 -6
மொத்த வாக்குகள் 9,328,839 8,371,718
விழுக்காடு 48.92% 44.43%
மாற்றம் +18.56% +19.54%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1] 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.

தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

கட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவுபட்டது. அர்ஸ் காங்கிரசு, காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[3]

அரசியல் நிலவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[6][7]

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
அதிமுக
இடங்கள்: 162
மாற்றம்: +14
வாக்குகள்: 9,328,839
வாக்கு %: 48.92%
அதிமுக 7,303,010 38.75% 177 129 -1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 596,406 3.16% 16 11 -1
இந்திய கம்யூனிஸ்ட் 501,032 2.66% 15 9 +4
காந்தி காமராஜ் காங்கிரசு 322,440 1.71% 10 6 +6
ஃபார்வார்ட் ப்ளாக் 65,536 0.35% 2 1
அர்ஸ் காங்கிரசு 52,119 0.28% 3 0
சுயேட்சைகள் 488,296 2.59% 13 6 +6
திமுக
இடங்கள்: 69
மாற்றம்: -6
வாக்குகள்: 8,371,718
வாக்கு  %: 44.43%
திமுக 4,164,389 22.10% 112 37 -11
இந்திரா காங்கிரசு 3,941,900 20.92% 114 31 +4
சுயேட்சைகள் 265,429 1.41% 8 1 +1
மற்றவர்கள்
இடங்கள்: 3
மாற்றம்: -8
ஜனதா கட்சி (ஜே.பி) 522,641 2.77% 95 2 -8
சுயேட்சைகள் 598,897 3.18% 446 1
மதசார்பற்ற ஜனதா கட்சி (ம.ஜ.க) 2,335 0.01% 1 0
ஜனதா கட்சி (பொம்மை) 762 0.00% 3 0
மொத்தம் 13 கட்சிகள் 18,845,006 100% 234

ஆட்சி அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

மேலும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1980 தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி?
  2. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. 13 ஏப்ரல் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Moment of Truth for MGR". Economic and Political Weekly (Economic and Political Weekly) 15 (4): 141–142. 26 January 1980. http://www.jstor.org/pss/4368350. பார்த்த நாள்: 15 February 2010. 
  4. G. Palanithurai (June 1991). Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu. Stosius Inc/Advent Books Division. பக். 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122002277. 
  5. Attar Chand (1988). M G Ramachandran: My Blood Brother. Gian Publishing House. பக். 7. 
  6. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009
  7. Keesing's report

வெளியிணைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

1980 தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம்

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்