திம்பிள் யாதவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
திம்பிள் யாதவ்
Dimple Yadav.jpg
திம்பிள் யாதவ் பிரச்சாரத்தின் போது
Member of Parliament, Lok Sabha
பதவியில்
8 ஆக்ஸ்ட் 2012 – 18 ஜீன் 2019
முன்னவர் அகிலேஷ் யாதவ்
பின்வந்தவர் சுப்ரத் பதக்
தொகுதி கன்னோசி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
புனே, மகராஷ்டிரா, இந்தியா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அகிலேஷ் யாதவ்
பிள்ளைகள் 3
இருப்பிடம் Saifai village, Etawah, Uttar Pradesh
படித்த கல்வி நிறுவனங்கள் லக்னோ பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
இணையம் http://www.samajwadiparty.in

திம்பிள் யாதவ் (பிறப்பு 15 ஜனவரி 1978) இந்திய அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினரான திம்பிள் யாதவ், இரண்டு முறை, கன்னோசி மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் , உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆவார்.[1] இவர் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்-புரவலருமான முலாயம் சிங் யாதவின் மருமகள் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

திம்பிள் யாதவ் 1978 இல் மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார்.[2] ஓய்வுபெற்ற இந்திய ராணுவ கர்னல் ஆர்.சி.எஸ் ராவத் மற்றும் சம்பா ராவத் ஆகியோரின் மூன்று மகள்களில் இரண்டாவது மகளாவார். [3] இவரது குடும்பத்தின் பூர்வீகம் உத்தரகண்ட் ஆகும். [4] இவர் புனே, பதிந்தா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு மற்றும் லக்னோவின் நேரு சாலையில் உள்ள இராணுவ பொதுப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார். [5] லக்னோ பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் பட்டம் பெற்றார். [6]

திம்பிள் மாணவராக இருந்தபோது அகிலேஷ் யாதவை சந்தித்தார். முதலில் அகிலேஷின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்தை எதிர்த்தனர். ஆனால் அகிலேஷின் பாட்டி முர்திதேவி ஒப்புதல் அளித்த பின்னரே அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்த இணை தமது 21ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார் [7] [2] . இவரது திருமணத்தில் திரைப்பட நட்சத்திரங்கள், அமிதாப் பச்சன் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். [8] திம்பிள் அகிலேசு தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஓர் மகன் உள்ளனர். [9]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2009ல் நடைபெற்ற பிரோசாபாத்தின் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் மற்றும் அரசியல்வாதியான ராஜ் பப்பருக்கு எதிராக போட்டியிட்ட யாதவ் தோல்வியுற்றார்.[10] இந்த இடைத்தேர்தலானது திம்பிளின் கணவர், அகிலேசு யாதவ் மே 2009 பொதுத்தேர்தலில் கன்னோடி தொகுதியுடன் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[11] [12] [13] [14] உத்திரபிரதேச சட்டமன்றக் குழுவில் நுழைவதற்கு இவரது கணவர் பதவிவிலகியதால் நடைபெற்ற கன்னோசி இடைத்தேர்தலை அடுத்து, 2012 ல் கன்னோசி தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திம்பிள் நாட்டின் 44வது நபராகவும், சுதந்திரம் பெற்ற பின்னர் உத்தரப்பிரதேசத்தில் நான்காவது நபராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] இத்தேர்தலில் போட்டியிட்ட தசரத சிங் சங்க்வார் (சம்யுக்ட் சமாஜ்வாடி தளம் ) மற்றும் சஞ்சு கதியார் (சுயேச்சை) ஆகிய இரு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றதால் பெற்றபோது இந்த நிலைமை ஏற்பட்டது. இத்தேர்தலில் பாரதீய ஜனதாவும், இந்தியத் தேசிய காங்கிரசும் எந்த வேட்பாளர்களையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் பாஜக அறிவித்த வேட்பாளர் தனது ரயிலைத் தவறவிட்டதால் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இயலவில்லை.

இதன் மூலம் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும், 1952 இல் அலகாபாத் மேற்கிலிருந்து புர்ஷோட்டம் தாஸ் டாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது நபராகவும் திகழ்ந்தார் . கணவர் முதலமைச்சராகவும் மனைவி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒரே பெண் எம்.பி. என்ற பெருமையும், அதே சபையில் இவரது மாமனார் உறுப்பினராகவும் இருந்தார். [6]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டு வேட்பாளராக டிம்பிள் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [15]

வகித்தப் பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வரிசை என் முதல் வரை பதவி
1. 2012 2014 15வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை கன்னோசி)
2. 2014 2019 16வது மக்களவை உறுப்பினர் (இரண்டாவது முறை கன்னோசி)

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Politically Famous Better Halves: Sonia Gandhi, Poonam Sinha & Dimple Yadav". தி எகனாமிக் டைம்ஸ். 14 May 2019. 16 June 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 2.0 2.1 "The love-story of Akhilesh and Dimple Yadav: A drama made for the movies". Latest Indian news, Top Breaking headlines, Today Headlines, Top Stories at Free Press Journal. 20 December 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Facts you didn't know about UP CM Akhilesh Yadav's wife Dimple Yadav". dailybhaskar. 12 August 2013. 20 December 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Mulayam crosses caste barriers". www.sunday-guardian.com. 20 December 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Facts you didn't know about UP CM Akhilesh Yadav's wife Dimple Yadav". Daily Bhaskar. 12 August 2013. 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. 6.0 6.1 6.2 "Lok Sabha 2014 Elections: Dimple Yadav, a horse-rider gallops into politics". DNA News. 29 March 2014. 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "4 साल तक चली थी अखिलेश-डिंपल की डेटिंग, ऐसी फिल्मी है CM की लव स्टोरी". Dainik Bhaskar. 1 July 2016. 20 December 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. Bhat, Vasudha (20 April 2014). "Jab they met: Akhilesh and Dimple Yadav". India TV News. 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. Bhat, Vasudha (20 April 2014). "Jab they met: Akhilesh and Dimple Yadav". India TV News. 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. Roy, Rustam (6 November 2009). "I am not fighting for family but for party's honour: Mulayam's bahu Dimple Yadav". Times of India. 7 March 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "'Dhritrashtra Syndrome' dominates phase III in UP". Ashish Tripathi. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 April 2014. 25 April 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. Pradhan, Sharat (12 November 2009). "Analysis: Why Dimple Yadav came a cropper in UP bypoll". Rediff. 7 March 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. SARIN, RITU; AMITAV RANJAN (14 December 2008). "Law Minister at the wheel in CBI's U-turn on Mulayam case". Indian Express. 7 March 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  14. "Probe UP CM's money: SC to CBI". CNN-IBN. 1 March 2007. 19 மார்ச் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 March 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  15. "Elections 2019: Dimple Yadav loses Samajwadi Party bastion Kannauj to BJP's Subrat Pathak". Scroll.in. https://scroll.in/latest/924621/elections-2019-dimple-yadav-loses-samajwadi-party-bastion-kannauj-to-bjps-subrat-pathak. பார்த்த நாள்: 27 May 2019. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:S-start வார்ப்புரு:Succession box வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=திம்பிள்_யாதவ்&oldid=2245" இருந்து மீள்விக்கப்பட்டது