நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (Nagapattinam Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 29வது தொகுதி ஆகும். ஆரம்ப காலத்தில் இந்தத் தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது, பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. நன்னிலம்
  2. திருவாரூர்
  3. நாகப்பட்டினம்
  4. வேதாரண்யம்
  5. திருத்துறைப்பூண்டி (தனி)
  6. கீழ்வேளூர் (தனி)

மக்களவை உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

நாகை பாராளுமன்றத் தொகுதியில், இதுவரை காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 எம். அய்யாக்கண்ணு
கே. ஆர். சம்பந்தம்
இந்திய தேசிய காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
1962 கோபால்சாமி தென்கொண்டார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. சாம்பசிவம் இந்திய தேசிய காங்கிரசு
1971 எம். காத்தமுத்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 எஸ். ஜி. முருகையன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1979* (இடைத்தேர்தல்) கே. முருகையன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 தாழை மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1984 எம். மகாலிங்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 ம. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1991 பத்மா இந்திய தேசிய காங்கிரசு
1996 ம. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1998 ம. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1999 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2004 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2009 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 கே. கோபால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 ம. செல்வராசு[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

7 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஏ. கே. எஸ். விஜயன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் எம். செல்வராசை, 47,962 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஏ. கே. எஸ். விஜயன் திமுக 3,69,915
ம. செல்வராசு இந்திய பொதுவுடமைக் கட்சி 3,21,953
எம். முத்துக்குமார் தேமுதிக 51,376
ஜி. வீரமுத்து பகுஜன் சமாஜ் கட்சி 5,123
பி. வீராசாமி சுயேட்சை 8,769

16வது மக்களவைத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. கோபால் அதிமுக 4,34,174
ஏ. கே. எஸ். விஜயன் திமுக 3,28,095
வடிவேல் இராவணன் பாமக 43,506
செந்தில் பாண்டியன் காங்கிரசு 23,967

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
77.71% 77.64% 0.07%

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,02,208[4]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில், 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு, அதிமுக வேட்பாளரான, சரவணனை 2,09,349 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
ம. செல்வராசு Indian Election Symbol Ears of Corn and Sickle.png இந்திய பொதுவுடமைக் கட்சி 3,296 5,22,892 52.17%
சரவணன் Indian Election Symbol Two Leaves.png அதிமுக 525 3,11,539 31.09%
செங்கொடி Gift box icon.png அமமுக 130 70,307 7.02%
மாலதி Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 241 51,448 5.13%
குருவய்யா Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 93 14,503 1.45%
நோட்டா - - 50 9,463 0.94%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்