பிரனீத் கௌர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பிரனீத் கௌர் (Preneet Kaur பிறப்பு 3 அக்டோபர் 1944) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் இந்திய அரசாங்கத்தில் 2009 முதல் 2014 வரை வெளியுறவு அமைச்சகத்தில் மாநில அமைச்சராக பணியாற்றினார் [1] பஞ்சாபின் 15 வது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கை அவர் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், மேலும் பாட்டியாலா தொகுதியில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இவர் இந்தியப் பொதுத் தேர்தல், 1999, இந்தியப் பொதுத் தேர்தல், 2004, இந்தியப் பொதுத் தேர்தல், 2009 ஆகிய தேர்தல்களில் வென்றார் , ஆனால் 2014 தேர்தல்களில் தோல்வி அடைந்தார் மற்றும் 2019 இல் மீண்டும் வெற்றி பெற்ற்றார்.

பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

பிரனீத் கவுர் இந்தியாவின் சிம்லாவில் ககலான் ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவர் இந்திய குடிமைப் பணி அதிகாரியான சர்தார் கியான் சிங் ககலான் மற்றும் சதீந்தர் கவுர் ஆகியோரின் மகள் ஆவார். கியான் சிங் ககலான் 1937 ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தார், அந்த உயரடுக்கு நிர்வாகச் சேவையில் ஒரு இந்தியர் அனுமதிக்கப்படுவது மிகவும் அரிதாக இருந்தது. 1960 களில் பஞ்சாபின் தலைமைச் செயலாளர் உட்பட பல உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் டிசம்பர் 2002 இல் இறந்தார். பிரீனீத் கவுருக்கு ஒரு சகோதரர், ஹிம்மத் சிங் ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிகிறார், மற்றும் ஒரு சகோதரி, கீதிந்தர் கவுர், அரசியல்வாதியும் முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியுமான சிம்ரஞ்சித் சிங் மானை மணந்தார் . [2] பிரனீத் கௌர் செயின்ட் பாடன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது சிம்லா இயேசுவின் கான்வென்ட் மற்றும் மேரி கல்லூரியில் பட்டம் பெற்றார் .

அக்டோபர் 1964 இல், பிரனீத் கௌர் இந்திய பாரம்பரியத்தில் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் அமரீந்தர் சிங்கினை மணந்தார். [3] இவரது கணவர் பஞ்சாப் மன்னர் அரசின் (பிரித்தானிய இந்தியா) மேனாள் ஆட்சியாளரின் பெயரளவு வாரிசாக இருந்தார் [4] [5] திருமணத்தின் போது இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த அமரீந்தர் சிங், தனது தந்தைக்குப் பிறகு பட்டியாலாவின் மகாராஜாவாக 1974 இல் பதவியேற்றார், பின்னர் பிரணீத் கவுர் பாட்டியாலாவின் மகாராணி ஆனார். இராணுவத்தில் இருந்து விலகிய பிறகு, அமரீந்தர் சிங் தனது தந்தையினைப் பின்பற்றி அரசியலில் நுழைந்தார், அங்கு அவர் பெரும் வெற்றியைப் பெற்றார். அவர் 1980 இல் பாட்டியாலா தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கும், 1985, 1992 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மாநில அரசில் பல ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் மற்றும் 2007 வரை முழு ஐந்து ஆண்டு காலத்திற்கு சேவை செய்தார். மார்ச் 2017 இல், அவர் மீண்டும் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, தற்போது இரண்டாவது முறையாக பஞ்சாப் முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.

இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரனிந்தர் சிங் எனும் ஒரு மகனும் (பிறப்பு 1967) மற்றும் ஜெய் இந்தர் கவுர் எனும் மகளும் (பிறப்பு 1966) உள்ளனர். ரணீந்தர் சிங் ஒரு அரசியல்வாதி, அவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டார். அவர் ரிசுமா கவுரை திருமணம் செய்து கொண்டார்.

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Detailed Profile - Smt. Preneet Kaur - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". www.archive.india.gov.in. 2016-11-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Gian Singh Kahlon dead
  3. "Preneet Kaur profile". 2 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Patiala princely state in Punjab
  5. Patiala princely state in Punjab
"https://ta.bharatpedia.org/index.php?title=பிரனீத்_கௌர்&oldid=2120" இருந்து மீள்விக்கப்பட்டது