பி. எச். பாண்டியன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. எச். பாண்டியன்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 1999 – 22 மே 2004
முன்னவர் கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
பின்வந்தவர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
தொகுதி திருநெல்வேலி
தமிழக சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
27 பெப்ரவரி 1985 – 5 பெப்ரவரி 1989
முன்னவர் க. இராசாராம்
பின்வந்தவர் மு. தமிழ்க்குடிமகன்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
30 சூன் 1977 – 26 சனவரி 1989
முன்னவர் த. ச. அ. சிவபிரகாசம்
பின்வந்தவர் ஆர். புதுநைனார் ஆதித்தன்
தொகுதி சேரன்மாதேவி
தனிநபர் தகவல்
பிறப்பு 27 பெப்ரவரி 1945
திருநெல்வேலி, தமிழ்நாடு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 4 சனவரி 2020(2020-01-04) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பிள்ளைகள் பி. எச். மனோஜ் பாண்டியன் (மகன்)

பி. எச். பாண்டியன் (P. H. Pandian, (27 பெப்ரவரி 1945 – 4 சனவரி 2020)) என்பவர் தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.

வாழ்கை[தொகு | மூலத்தைத் தொகு]

பி. எச். பாண்டியன் 1960களின் இறுதியில் வழக்கறிஞராக தன் வாழ்கையைத் துவக்கினார். அப்போது பரபரப்பான வழக்காக இருந்த ஆளவந்தார் கொலை வழக்கை அரசு வழக்கறிஞராக இருந்து நடத்திய ஜே. எஸ். அதனேசியசிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்து பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆர். 1972இல் அதிமுகவைத் தொடங்கியபோது பி. எச் பாண்டியன் அக்கட்சியியல் இணைந்தார். 1972 முதல் 1988வரை அதிமுக வழக்கறிஞர் அணியியன் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1989இல் அதிமுகவின் வி. என். ஜானகி இராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்[1]

சட்டப்பேரவைத் தலைவராக[தொகு | மூலத்தைத் தொகு]

1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.[2][3] பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தை நிலைநாட்டியதற்காக நினைவூகூறப்படுகிறார். இவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில், ஒன்பது திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் சட்ட நகலை எரித்ததைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்தார்.[4] 1987இல் சட்டமன்றத்தை விமர்சிக்கும்வகையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அட்டைப்பட கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது. இதைக் கண்டித்து அந்த பத்திரிக்கையின் ஆசிரியரான பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார். பி. எச் பாண்டியன். இதன்படி சட்டமன்றத்துக்கு வந்த பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பாண்டியன், அவரை மன்னிப்புக் கேட்க உத்தரவிட்டார். இதற்கு பால சுப்பிரமணியன் மறுத்ததால் மூன்றுமாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் பாண்டியன். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரவைத் தலைரான பாண்டியனின் உத்த்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பி. எச். பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை வாங்க மறுத்த பி. எச் பாண்டியன், நீதிமன்றத்தைவிட சட்டப்பேரவைத் தலைவரான தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து நிலைமை மோசமாவதைத் தடுக்க பாலசுப்பிரமணியனை சிறையில் இருந்து விடுதலை செய்ய முதலமைச்சர் எம். ஜி. ஆர் உதுதரவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[5]

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவரது மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தராக பதவிவகித்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2019 ஆம் ஆண்டு காலமானார். இந்த இணையருக்கு டாக்டர் தேவமணி என்ற மகளும், பால் மனோஜ் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் மகன் மனோஜ் பாண்டியன் 2001 முதல் 2006 வரைை சேரன்மாதேவி சட்டமன்ற உறுப்பினராகவும் பின்பு அதிமுக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவராவர். இந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்ப்பட்டிருந்து பி. எச். பாண்டியன் 2020 சனவரி 4 அன்று காலமானார். [6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. 2014-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 'சட்டப்பேரவை தலைவருக்கான அதிகாரத்தை மெய்ப்பித்த பி.எச்.பாண்டியன்', இந்து தமிழ் 2020 சனவரி 5
  5. சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று பிரகடனம் செய்த பி. எச். பாண்டியன், ஒன் இந்தியா, 2020 சனவரி 4
  6. முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்! நியூஸ் 18, 2020 சனவரி 4
"https://ta.bharatpedia.org/index.php?title=பி._எச்._பாண்டியன்&oldid=1785" இருந்து மீள்விக்கப்பட்டது