பி. எம்.சையது

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
Padanatha Mohammed Sayeed
Power Minister in இந்திய அரசு
முன்னவர் ஆனந்த் கீத்தே
பின்வந்தவர் சுசில்குமார் சிண்டே
தொகுதி Lakshadweep
தனிநபர் தகவல்
பிறப்பு மே 10, 1941(1941-05-10)
Andrott Island, இலட்சத்தீவுகள்
இறப்பு 18 திசம்பர் 2005(2005-12-18) (அகவை 64)
சியோல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) A.B. Rahmath Sayeed
இருப்பிடம் Lakshadweep
சமயம் இசுலாம்

பத்னாத முகம்மது சையீத் (10 மே 1941 - 10 டிசம்பர் 2005) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். 1967 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை  தொடர்ந்து பத்து முறை மக்களவை உறுப்பினராக  இலட்சத்தீவு மக்களுக்காக பணியாற்றினார்.

இளமைக்காலம்[தொகு | மூலத்தைத் தொகு]

பத்னாத முகம்மது சையீத் ஆண்ட்ரட், லட்சத்தீவில் பிறந்தார். இவர் மங்களூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டமும்  மும்பையில் உள்ள சித்தார்த்தா கல்லூரியில் சட்டம் பயின்றார்.

அரசியல் பயணம்[தொகு | மூலத்தைத் தொகு]

சையது 1967 ஆம் ஆண்டு  இவர் தம் 26 ஆம் வயதில் முதன்முதலாக லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1979 ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை  மாநில, ஸ்டீல், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும் இவர் மத்திய உள்துறை மந்திரி (1993-1995) தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் (1995-1996) மக்களவை துணை சபாநாயகர் மற்றும்  காங்கிரஸ் (1998-2004) குழுவின் உறுப்பினராக இருந்தார்.

  சையது 1967 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து முறை மக்களவை உறுப்பினராக இலட்சத்தீவு மக்களுக்காக பணியாற்றினார். 2004 ஆம்   பொதுத் தேர்தலில் 71 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தள (ஐக்கிய) கட்சியின் டாக்டர் பி. பூநினிகோயாவால் தோற்கடிக்கப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் அவரது தொடர்ச்சியான வெற்றி நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் ராஜ்ய சபாவிற்கான டெல்லியின்  பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2005 டிசம்பர் 18 அன்று சியோலில்  மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது மகன் முகமது ஹம்துல்லா சயீத் (26), புனேவில் உள்ள இந்திய சொசைட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர்  2009 மே 15,ல் நடந்த பொதுத்தேர்தலில் இலட்சத் தீவின் 15 வது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  [1]

பார்வை நூல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பி._எம்.சையது&oldid=1955" இருந்து மீள்விக்கப்பட்டது